சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த நடப்புக்கு வந்துள்ள கடும் கட்டுப்பாடுகள் பலன் தருகின்றன.
இருந்தாலும் இதில் மெத்தனப் போக்குக்கு இப்போது இடமில்லை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
ஜூன் 13க்குப் பிறகு கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளரும் என்பதற்கான வாய்ப்பு தெரிகிறது.
என்றாலும் தேவை எனில் மேலும் கட்டுபாடுகள் நடப்புக்கு வரும் என்பதை உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ப மனத்தளவில் நாம் ஆயத்தமாக வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கொவிட்-19 சூழ்நிலை தொடர்ந்து நிச்சயமில்லாதபடியே இருந்து வருகிறது என்று நேற்று கூடிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் திரு வோங் குறிப்பிட்டார்.

