லிம் சூ காங்கில் பந்தயம்; ஐவருக்குச் சிறை

லிம் சூ காங்கில் பந்தயம்; ஐவருக்குச் சிறை

2 mins read
b40e44a9-5ded-49e1-b852-8e05a8d7c46f
-

லிம் சூ காங்­கில் ஐந்து நண்­பர்­கள் ஒரு­வரை ஒரு­வர் போட்டி போட்டு வாக­ன­மோட்­டி­ய­தற்கு சிறை, அப­ரா­தம், வாக­ன­மோட்­டத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் ஐவ­ரும் பந்­த­யத்­தில் ஈடு­பட்­ட­னர்.

ஜாலான் பஹாரை நோக்­கிச் செல்­லும் லிம் சூ காங் சாலை­யில் ஐயன் கோ டேபாவ், 32, பந்­த­யத்­தில் ஈடு­பட்ட குற்­றத்­தை­யும் அபா­ய­க­ர­மாக வாக­னம் ஒட்­டி­ய­தை­யும் ஒப்­புக்கொண்­டார். அவ­ரது நண்­பர்­கள் டேனி­யல் சுவா வெய் சுவான், 28, டேனி­யல் லீ ஜி, 28, ஹுபெர்ட் சூ, 27, சேமு­வேல் லோ ஷி லி, 17 ஆகி­யோ­ரும் பந்­த­யத்­தில் ஈடு­பட்­டதை ஒப்­புக் கொண்­டனர்.

ஐவ­ருக்­கும் ஒரு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தலா 1,500 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. மேலும் அவர்­க­ளுக்கு 18 மாதங்­கள் வாக­னம் ஓட்­டத் தடை விதிக்­கப்­பட்­டது. அபா­ய­க­ர­மாக வாக­னத்தை ஓட்­டி­ய­தற்­காக கோவுக்கு கூடு­த­லாக 2,500 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. கேம­ரா­வி­லி­ருந்து தப்ப அவர்­கள் கவ­ன­மாக பந்­த­யத்­துக்­கான இடத்தை தேர்வு செய்து இரு­வர் இரு­வ­ராக போட்­டி­போட்­ட­னர்.

நீதி­மன்­றத்­தில் பேசிய தற்­காப்­புத் தரப்பு வழக்­க­றி­ஞர் கெவின் ஹோ, கோவும் சுவா­வும் முத­லில் போட்­டி­யில் இறங்­கி­ய­தாக சொன்­னார். கோ, பிஎம்­ட­பிள்யூ காரை­யும் சுவா, ஹோண்டா சிவிக் காரை­யும் ஓட்­டி­னர். சுவா மூன்று முறை ஒலிப்­பானை எழுப்­பி­ய­தும் இரு கார்­களும் பறந்­தன. சுவா, 115 கிலோ மீட்­டர் வேகத்­தி­லும் கோ, 110 கிலோ மீட்­டர் வேகத்­தி­லும் காரை ஓட்­டி­னர். இதே போன்று இரு­வர் இரு­வ­ராக மாறி மாறி பந்­த­யத்­தில் ஈடு­பட்­ட­னர்.