2,600 முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய $85 மில்லியன் நிறுத்திவைப்பு

வேலை ஆத­ர­வுத் திட்­டம், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடந்த மார்ச் மாதம் 2600 முத­லாளி களுக்கு வழங்­கப்­பட வேண்­டிய சுமார் 85 மில்­லி­யன் வெள்ளி நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் அத­னைத் தெரி­வித்­தது.

முத­லா­ளி­கள் ஒப்­ப­டைத்த தக­வல்­கள் உண்­மை­யா­ன­வையா என்­றும் சரி­யா­ன­வையா என்­றும் உறுதிப்­ ப­டுத்­தப்­பட்ட பின்­னர், அத்­தொகை நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்­றது ஆணை­யம்.

வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் கீழ் 52 மில்­லி­யன் வெள்­ளி­யும் வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 33 மில்­லி­யன் வெள்­ளி­யும் முத­லா­ளி ­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­மல் மார்ச் மாதத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

உத­வித் திட்­டங்­க­ளுக்கு முத­லா­ளி­கள் தகு­தி­பெ­று­வதை உறு­தி­செய்­யும் கூடு­தல் ஆவ­ண­வங்­களைப் பெற வேண்­டி­யி­ருந்­ததே அதற்­குக் கார­ணம்.

உத­வித் தொகை நிறுத்­தி­வைக்­கப்­பட்ட 2,600 முத­லா­ளி­களும் வேலை ஆத­ர­வுத் திட்­டம், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் ஆகி­ய­வற்­றுக்­குத் தகு­தி­பெ­றும் முத­லா­ளி­களில் இரண்டு விழுக்­காட்­டி­னர் ஆவர்.

வேலை ஆத­ர­வுத் திட்­டம் 2020 பிப்­ர­வ­ரி­யில் அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

கொவிட்-19 சூழ­லில் முத­லா­ளி­கள் தங்­கள் உள்­ளூர் ஊழி­யர்­களை தொடர்ந்து வேலை­யில் வைத்­தி­ருக்க உத­வு­வதே அத்­திட்­டத்தின் நோக்­க­மா­கும். அதில் உள்­ளூர் ஊழி­யர் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கு­மான ஊதி­யத்­தில் முதல் 4,600 வெள்ளி தொகை­யில் ஒரு பங்கை அர­சாங்­கம் செலுத்­து­கிறது.

கடந்­தாண்டு ஆகஸ்ட் மாதம் அறி­விக்­கப்­பட்ட வேலை உருவாக் கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம், கூடு­தல் உள்­நாட்­ட­வர்­களை வேலைக்கு அமர்த்தும் முத­லா­ளி­க­ளுக்கு உதவுகிறது.

வேலை வளர்ச்­சித் திட்­டத்­தில் மோசடி குறித்து விசா­ரணை

வேலை வளர்ச்­சித் திட்­டத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 10 சம்­ப­வங்­க­ளை போலி­சார் விசா­ரித்து வரு­வ­தா­க­வும் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் தெரி­வித்­தது. அந்த சம்­ப­வங்­க­ளைப் பற்றி போலி­சி­டம் தக­வல் தெரி­வித்­த­தாக ஆணை­யம் கூறி­யது.

ஊழி­யர்­க­ளுக்­குச் செலுத்­தும் மத்­திய சேம நிதித் தொகை­யைத் தவ­றா­கக் குறிப்­பிட்டு பின்­னர் அத­னைத் திருத்­திக்­கொண்ட முத­லா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உத­வித் தொகையை அதற்கு ஏற்ப வழங்­கி­ய­தாக அது கூறி­யது.

வேறு சில முத­லா­ளி­கள், ஆணை­யத்­தின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளிக்­கா­த­தால் அவர்­க­ளுக்­கான உத­வித்­தொகை வழங்­கப்­ப­ட­வில்லை என்­றது ஆணை­யம்.

சிலர் போலி­யான ஊழி­யர் விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­த­னர் என்­றும் வேறு சிலர் ஊதி­யத்தை கூட்­டா­மல் மசே­ம­நிதி பங்­க­ளிப்­பு­களை அதி­க­மா­கக் காட்­டி­னர் என்­றும் ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!