மலேசிய செய்தியாளரிடம் இழப்பீடு கோரிய பிரதமர் லீ; வழக்கு ஒத்திவைப்பு

மலேசிய செய்தியாளரிடம் இழப்பீடு கோரிய பிரதமர் லீ; வழக்கு ஒத்திவைப்பு

2 mins read
94f5d652-5d1b-417b-832b-e9753d3f896c
-

தி ஆன்­லைன் சிட்டி­சன் (டிஓசி) இணை­யப்­பக்­கத்­திற்­காக எழு­தும் மலே­சிய செய்தியாளர் தமக்கு அவ­தூறு விளை­வித்­த­தா­கக் கூறி அதற்­கான இழப்­பீடு கேட்டு பிர­த­மர் லீ சியன் லூங் வழக்­குத் தொடுத்­துள்­ளார்.

பிர­த­மர் லீ தனது தந்தை திரு லீ குவான் இயூ­வுக்கு தவ­றான வழி­காட்­டி­ய­தாக அந்த இணை­யப்­பக்­கத்­தில் 'டிஓசி' எழுத்­தா­ள­ரான ருபா­‌ஷினி சண்­மு­க­நா­தன் எழு­தி­யி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த வழக்­கில் பிர­த­மர் லீக்கு ஏற்­ப­டுத்­திய அவ­தூ­றை­யும் அதற்­கான இழப்­பீட்­டை­யும் நேற்று உயர்­நீ­தி­மன்­றம் மதிப்­பீடு செய்­ய­வி­ருந்­தது. ஆனால் ருபா­ஷினி சண்­மு­க­நா­தன் நீதி­மன்­றத்­துக்கு வர­வில்லை. பிர­த­மர் லீ கோரும் இழப்பீடு தொகை பற்றி குறிப்­பி­டப்­ ப­ட­வில்லை.

மெய்­நி­கர் தள­மான 'ஸூம்' வழி நடந்த விசா­ர­ணை­யில் ருபா­‌ஷி­னிக்கு 2019ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து நீதி­மன்ற ஆவ­ணங்­கள் அவ­ரது தனிப்­பட்ட மின்­னஞ்­ச­லுக்­கும் 'டிஓசி' மின்­னஞ்­ச­லுக்­கும் அவருக்கு நேர­டி­யா­க­வும் அனுப்­பப்­பட்டு வரு­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பிர­த­மர் லீயைப் பிர­தி­நி­திக்­கும் தவிந்­தர் சிங்­கின் வழக்­க­றி­ஞர்­கள் முதன்­மு­த­லாக 2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 21ஆம் தேதி அந்த செய்­தியை நீக்கி, மன்­னிப்­புக் கேட்டு பிர­த­ம­ருக்கு இழப்­பீடு வழங்­கு­மாறு கடி­தம் அனுப்பி ருபா­ஷி­னியை தொடர்­பு­கொள்ள முயற்சி செய்­த­னர்.

அவ­ரது தனிப்­பட்ட மின்­னஞ்­சல் முக­வ­ரிக்­கும், அவ­ரது ஃபேஸ்புக், லிங்க்ட்­இன் போன்­ற­வற்­றுக்கும் தனிப்­பட்ட செய்­தி­யா­க­வும் அந்­தக் கடி­தம் அனுப்­பப்­பட்­டது. அந்­தக் கடி­தத்தை ருபா­‌ஷினி புறக்­க­ணித்து ­விட்­டார் என்று பிர­த­மர் லீ மனு­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.

மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநி­லம், ‌‌‌ஷா ஆல­மில் உள்ள ருபா­‌ஷி­னி­யின் இல்­லத்­திற்கு மலே­சிய சட்ட நிறு­வ­னம் மூலம் அவ­ருக்கு நீதி­மன்ற அழைப்­பாணை, இழப்­பீடு கோரிக்கை விவரம், நீதி­மன்ற உத்­த­ரவு முத­லி­யவை 2019ஆம் ஆண்டு டிசம்­பர் 4ஆம் தேதி அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. அவ­ருக்கு 2020ஆம் ஆண்­டில் இதர ஆவ­ணங்­கள் அனுப்­பி­வைக்­கப்­பட்­டன.

ஆனால் இவ்­வாண்டு ஜன­வரி 22ஆம் தேதிக்­குப் பின்­னர் ருபா­‌ஷி­னி­யின் சகோ­த­ரர் என்று தன்னை குறிப்­பிட்ட ஓர் ஆட­வர், ருபா­‌ஷினி இந்த முக­வ­ரி­யில் இல்லை என்று கூறி­னார்.

அவ­ரது இரு மின்­னஞ்­சல் முக­வரிக­ளுக்­கும் முந்­தைய இல்ல முக­வ­ரிக்­கும் ஆவ­ணங்­கள் அனுப்பி ­வைக்­கப்­பட்­டன.

இந்த நிலை­யில் ருபா­‌ஷி­னிக்கு அனுப்­பிய கடி­தத்­தில் தனது இழப்­பீட்டு கோரிக்­கையை அவர், ஏற்கவோ, மறுக்­கவோ இல்லை என்று பிரதமர் தமது பிரமாண வாக்குமூலத்தில் தெரி­வித்­தி­ருந்­தார். மேலும் வழக்­கில் ருபா­ஷினி முன்­னி­லை­யா­க­த­தால் நேற்று பிர­த­மர் லீக்கு சாத­மாக தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

'பிர­த­மர் லீயின் மனைவி ஹோ சிங் குடும்ப உற­வு­க­ளைத் துண்­டித்­துக் கொள்­வது தொடர்­பான செய்தியை சம்­பந்­த­மில்­லா­மல் பகிர்ந்து­கொண்­டார்' என்ற தலைப்­பில் 2019ல் டிஓ­சி­யில் ருபா­ஷினி எழு­திய கட்­டு­ரைக்­காக பிர­த­மர் லீ வழக்­குத் தொடுத்­தி­ருந்­தார்.

இந்த வழக்­கில் இழப்­பீட்­டுத் தொகையை மதிப்பீடு செய்வதற்காக நீதி­பதி ஆட்ரி லிம் விசாரணை வேறு ஒரு தேதிக்கு ஒத்­தி­வைத்­தார். இதே கட்­டு­ரைக்­காக 'டிஓசி' ஆசி­ரி­யர் டெர்ரி ஸு மீதும் திரு லீ தனி­யாக வழக்­குத் தொடுத்­துள்­ளார். இந்த வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது.