செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
03e03dcc-e3d6-42ee-93db-4a0a6231b186
-

5,000க்கும் மேற்பட்ட தொலைபேசி

எண்களை தடுத்த கைபேசி செயலி

சந்தேகமான தொலைபேசி அழைப்புகளை தடுத்து நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 'ஸ்கேம்ஷீல்ட்' எனும் செயலி 5,500 தொலைபேசி எண்களிலிலிருந்து வரும் அழைப்புகளை தடுத்து நிறுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அறிமுகமான இந்தச் செயலியை இதுவரை 119,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை தேசிய குற்றத்தடுப்பு மன்றமும் சிங்கப்பூர் போலிஸ் படையும் நிர்வகித்து வருகின்றன. ஆனால் இந்தச் செயலி தற்போது ஐபோனுக்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்ட் கைபேசி களுக்கான செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

முதலாளிகளின் கையில்

பணிப்பெண்களின் கடப்பிதழ்

சில முதலாளிகள் சட்டவிரோதமாக பணிப்பெண்களின் கடப்பிதழ்களையும் வொர்க் பர்மிட்டுகளையும் வாங்கி வைத்திருப்பது திடீர் சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதத்திலிருந்து ஏறக்குறைய 200 சோதனைகளை மனிதவள அமைச்சு நடத்தியுள்ளது.

பணிப்பெண்களை நேரிடையாகச் சந்திப்பது உள்ளிட்ட அமைச்சின் புதிய சோதனை நடவடிக்கைகள் அவர்களுக்கு தகுந்த வாழ்விடங்களையும் வேலையிடங்களையும் உறுதி செய்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் இல்லப் பணிப்பெண், வெளிநாட்டு ஊழியர் நல அமைப்புகள் தெரிவித்தன.

"இல்லப்பெண்களை அதிகாரிகள் நேரில் சந்திப்பதற்கு முதலாளிகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.

ரகசிய கோப்புகள் கசிவு;

போலிசில் மதரஸா புகார்

அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத அன்­னி­யர்­க­ளி­டம் ரக­சிய கோப்­பு­கள் கசிந்­துள்­ளதை அறிந்த இஸ்­லா­மிய சமய பள்­ளி­யான மத­ரஸா இர்­‌‌‌ஷாத் ஸூரி அல்-இஸ்­லா­மியா போலி­சி­டம் புகார் அளித்­துள்­ளது என்று முயிஸ் எனப்­படும் இஸ்­லா­மிய சமய மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து தோ பாயோ­வில் அமைந்­துள்ள முயி­ஸுக்­கும் மத­ரஸா இர்­‌‌‌ஷா­துக்­கும் இம்­மா­தம் 11ஆம் தேதி தெரி­ய வந்­த­தாக நேற்று மன்­றம் தெரி­ வித்­தது.

அந்த மதரஸா பள்ளி தான் நடத்திய விசா­ர­ணை­யில் மத­ர­ஸா­வின் ஊழி­யர் பல ரக­சிய ஆவ­ணங்­களை பள்­ளி­யின் மின்­னஞ்­சல் காப்­ப­கத்­தி­லி­ருந்து அனு­ம­தி­யின்றி பதி­வி­றக்­கம் செய்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

"ஊழி­ய­ரு­டன் நடத்­தப்­பட்ட நேர்­கா­ண­லிற்­குப் பின்­னர் சட்­ட­வி­ரோ­த­மாக மத­ர­ஸா­வின் ரக­சிய ஆவ­ணங்­களை வேறொ­ரு­வ­ருக்கு அனுப்­பி­வைத்­த­தாக போலி­சி­டம் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது," என்று முயிஸ் தெரி­வித்­தது.

"உட­ன­டி­யாக அந்த ஊழி­யர் மத­ர­ஸா பணி­யி­லி­ருந்து வில­கி­ய­தா­க­வும் போலிஸ் விசா­ரணை நடந்து வரு­வ­தால் வேறு எந்­தத் தக­வ­லை­யும் பள்ளி தற்­போது வழங்க இய­லாது என்­றும் முயிஸ் தெரி­வித்­தது.

மத­ர­ஸா­வின் நிதி பரி­வர்த்­த­னை­க­ளின் மறு­ஆய்வு தொடர்­பில் அந்த ஆவ­ணங்கள் திரு­டப்­பட்­டன என்றும் கூறப்­பட்­டது.