குறைந்த வருமான சிங்கப்பூரர்கள் 1.4 மில்லியன் பேருக்கு ஜூன் 23 முதல் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு

2 mins read
86c9d546-12b6-4011-af3c-9a550f8f9583
-

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் ஏறக்­கு­றைய 1.4 மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் இம்­மா­தத்­தில் இருந்து பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்­றுச்­சீட்டு வழங்குதொகைக­ளைப் பெறு­வர் என்று நிதி­ய­மைச்சு நேற்று தெரி­வித்­தது.

தகு­தி­யு­டை­யவர்களில் பத்­தில் ஒன்பது பேருக்கு வழங்­கு­தொகை தானா­கவே வந்து சேரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அத்­து­டன், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கும் கிட்­டத்­தட்ட 950,000 சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு, காலாண்டு ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு யு-சேவ் தள்ளு­ப­டி­யும் சிறப்­புத் தொகை­­யும் அடுத்த மாதம் வழங்­கப்­படும் என்று அமைச்­சின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தா­கவே வழங்குதொகை­களைப் பெறு­வ­தற்கு இம்­மா­தம் 15ஆம் தேதிக்­குள் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது அடை­யாள எண்­களை 'பேநவ்' வச­தி­யு­டன் இணைக்­கு­மாறு ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அன்­றா­டச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் ஒரு­முறை மட்­டும் வழங்­கப்­படும் '$200 ரொக்க சிறப்­புத் தொகை' இம்­மா­தம் 23ஆம் தேதி அவர்­களின் வங்­கிக் கணக்­கு­களில் போடப்­படும்.

ஜூன் 15ஆம் தேதிக்­குள் 'பேநவ்'வுடன் அடை­யாள எண்ணை இணைக்­கா­மல், அதே நேரத்­தில் தங்­க­ளது வங்­கிக் கணக்கு எண்­களை முன்­கூட்­டியே தெரி­வித்­து இ­ருப்­போ­ருக்கு இம்­மா­தம் 30ஆம் தேதி­யன்று வங்­கிப் பரி­மாற்­றம் மூலம் அத்­தொகை வழங்­கப்­படும்.

எஞ்­சி­யோ­ருக்கு அடை­யாள அட்­டை­களில் உள்ள முக­வ­ரி­களுக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதி­யில் இருந்து காசோலை அனுப்­பப்­படும்.

இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின்­போது அறி­விக்­கப்­பட்ட $900 மில்­லி­யன் இல்ல ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டத்­தின் ஒரு பகுதி­யாக, மொத்­தம் $280 மில்­லி­யன் மதிப்­பி­லான இந்த ரொக்க சிறப்­புத் தொகை வழங்­கப்­ப­டு­கிறது.

வழக்­க­மான ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு வழங்குதொகை முறை­யில் வழங்­கப்­படும் $300, ஜூலை 30ஆம் தேதி குடி­மக்­க­ளின் வங்­கிக் கணக்கு­களில் போடப்­படும். அதற்கு, ஜூலை 20ஆம் தேதிக்­குள் அவர்­கள் தங்­களின் அடை­யாள எண்­களை 'பேநவ்'வுடன் இணைக்க வேண்­டும்.

அத்­தே­திக்­குள் 'பேநவ்'வுடன் அடை­யாள எண்ணை இணைக்­கா­மல், அதே நேரத்­தில் தங்­க­ளது வங்­கிக் கணக்கு எண்­களை முன்­கூட்­டியே தெரி­வித்­தி­ருப்­போ­ருக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி­யன்று வங்­கிப் பரி­மாற்­றம் மூலம் அத்­தொகை வழங்­கப்­படும். எஞ்­சி­யோ­ருக்கு அவர்களின் அடை­யாள அட்­டை­களில் உள்ள முக­வ­ரி­க­ளுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி­யில் இருந்து காசோலை அனுப்­பப்­படும்.

இந்த வகை­யில், ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்­தின்­கீழ் மொத்­தம் ஏறத்­தாழ $405 மில்­லி­யன் வழங்­கப்­படும்.

அத்­து­டன், வரும் ஜூலை 30ஆம் தேதி­யில் இருந்து, 65 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டைய ஏறக்­கு­றைய 575,000 சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மசே நிதி மெடி­சேவ் கணக்கு­களில் $450 வரை நிரப்­பப்­படும் என்று அமைச்சு தெரி­வித்துள்ளது. இவ்வகை­யில், மொத்தம் கிட்­டத்­தட்ட $170 மில்­லி­யன் வழங்கப்படும்.

ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்­தின்­கீழ் உத­வி­பெற சிங்­கப்­பூ­ரர்­கள் நேற்­றில் இருந்து பதி­வு­செய்­ய­லாம். அர­சாங்­கத்­தின் வழங்­கு­தொ­கை­யைப் பெற ஏற்­கெ­னவே பதிவு­செய்துகொண்­டோர் மீண்­டும் பதிவு­செய்­யத் தேவை­யில்லை.