மூன்று புளோக்குகளில் கொரோனா பரிசோதனை தொடங்கியது

2 mins read
a731822a-c21e-437c-b859-e1a931727c00
ஹவ்காங் அவென்யூ 8ல் 501 மற்றும் 507 புளோக்குகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், புளோக் 501ன் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனைக் கூடத்தில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹவ்­காங்­கில் இரு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கு­க­ளி­லும் ஈசூ­னில் ஒரு புளோக்­கி­லும் நேற்று கட்­டாய கொவிட்-19 பரி­சோ­தனை தொடங்­கி­யது.

ஹவ்­காங் அவென்யூ 8ல் 501, 507, ஈசூன் ஸ்தி­ரீட் 72ல் 745 ஆகிய மூன்று புளோக்­கு­களில் வசிப்­போர் அனை­வ­ரும் கட்­டா­ய­மாக எச்­சில்/சளி மாதி­ரிப் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு நேற்று முன்­தினம் அறி­வித்­தது.

ஈசூன் புளோக் 745 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இடையே நடத்­தப்­பட்ட கண்­கா­ணிப்­புச் சோத­னை­களில், இரு வீடு­க­ளைச் சேர்ந்த அறு­வர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அத்­து­டன், கழி­வு­நீர்ச் சோத­னை­யில் கொவிட்-19 கிரு­மித் துணுக்­கு­கள் இருந்­தது கண்­டு­பிடிக்­கப்­பட்­டதை அடுத்து, அந்த புளோக்­வா­சி­க­ளுக்­குக் கட்­டாய கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்ட அறு­வருக்கும் எப்­படிக் கிருமி தொற்­றி­யது என்­பது ஆரா­யப்­பட்டு வரு­கிறது.

இத­னி­டையே, ஹவ்­காங் புளோக் 501 மற்­றும் 507ல் சேக­ரிக்­கப்­பட்ட கழி­வு­நீ­ரைச் சோதித்­த­போது, அதி­லும் கொவிட்-19 கிரு­மித் துணுக்கு­கள் இருந்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்டது.

இவ்­விரு இடங்­க­ளி­லும் நேற்­றுக் காலை 9 மணி­யில் இருந்து கட்­டாய கொரோனா பரி­சோ­தனை தொடங்­கி­யது.

ஹவ்­காங் புளோக் 507க்கு நேற்­றுக் காலை 9 மணி­ய­ள­வில் சென்­றி­ருந்­த­போது, கொரோனா பரி­சோதனை முழு­வீச்­சில் இடம்­பெற்று வந்­த­தை­யும் தங்­க­ளைச் சோத­னைக்கு உட்­ப­டுத்­திக்­கொள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் வரி­சை­யில் நின்­றி­ருந்­த­தை­யும் கண்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.

அவர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி கோ பெங் ஹப், 60, "நான் நன்­றாக இருப்­ப­தால் என்­னைப் பற்­றிக் கவ­லைப்­ப­ட­வில்லை. ஆனால், இந்த புளோக்­கில் எவரை­யே­னும் கிருமி தொற்­றி­யி­ருக்­குமோ என்றே கவ­லைப்­ப­டு­கி­றேன்," என்­றார்.

தாம் எப்­போ­துமே கவ­ன­மாக இருப்பதாகவும் வெளியே செல்­லும்­போ­தும் அல்­லது திரும்­பிய பின்­ன­ரும் கைகளை நன்கு கழு­வி­விடு­வதா­க­வும் சொன்னார் மெக்­டோ­னல்ட்ஸ் கிளை­யில் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி கோ.

எச்­சில்/சளி மாதிரி சேக­ரிப்­புப் பணி ஐந்து நிமி­டங்­களில் முடிந்து­விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

எதிர்கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­கும் சக அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி எம்.பி. ஜெரல்ட் கிய­மும் நேற்­றுக் காலை அக்­கு­டி­யி­ருப்­பிற்­குச் சென்று, குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் உரை­யா­டி­னர். ஹவ்­காங் எம்.பி. டெனிஸ் டானும் அங்கு வந்­து இருந்­தார்.

ஈசூன் புளோக் 745ல் இன்­றும் ஹவ்­காங்­கில் உள்ள இரு புளோக்­வா­சி­க­ளுக்கு நாளை­யும் கொரோனா பரி­சோ­தனை நிறை­வு­றும்.