கிருமிக் குழுமத்தால் உணவுப் பாதுகாப்பு கவலை

கிருமிக் குழுமத்தால் உணவுப் பாதுகாப்பு கவலை

2 mins read
b570df4f-9d47-4d92-9867-980f5f8c48b8
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து 'ஹுவா ஸாய்' கிளைகளும் மூடப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொற்றுப் பரவலைத் தடுக்க இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்ட 26 'ஹுவா ஸாய்' கிளைகள்

வாட்­டிய வாத்து இறைச்­சியை விற்­கும் 'ஹுவா ஸாய்' உண­வுக் கடை­யில், சமை­யல் வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­னதை அடுத்து நிறு­வ­னத்­தின் 26 கிளை­களும் 14 நாட்­க­ளுக்கு மூடப்­பட்­டன. இதை­யடுத்து உண­வுப் பாது­காப்பு குறித்து அக்­கறை நில­வத் தொடங்கி­யுள்­ளது.

அனைத்து கிளை­க­ளை­யும் மூடிய நிலை­யில் அங்கு சுத்­தம் செய்­யும் பணி­கள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்­றும் தொற்­றுப் பர­வ­லுக்­கான சாத்­தி­யத்­தைத் தடுத்து நிறுத்­த­லாம் என்­றும் சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

முதன்­மு­த­லில் ஆங்­கர்­வேல் ரோடு புளோக் 308ல் அமைந்­துள்ள 'என்­டி­யுசி ஃபுட்ஃபேர்' உண­வங்­கா­டி­யில் இருந்த 'ஹுவா ஸாய்' கடை ஊழி­ய­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது.

பின்­னர் அக்­கடை தொடர்­பில் மேலும் சில­ருக்­குத் தொற்று உறுதி­யான நிலை­யில் நேற்று மாலை நில­வ­ரப்­படி கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் ஒன்­பது பேர் சேர்ந்­து­விட்­டனர்.

மூன்று 'ஹுவா ஸாய்' கிளை­களில் வேலை பார்க்­கும் ஏழு ஊழி­யர்­கள் கிரு­மிக் குழு­மத்­தில் அடங்­கு­வர். எஞ்­சிய இரு­வர் 'ஆங்­கர்­வேல் என்­டி­யுசி ஃபுட்ஃபேர்' உண­வங்­கா­டி­யின் வேறு கடை­களில் வேலை பார்ப்­ப­வர்­கள் என்று கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே ஆங்­கர்­வேல் ரோடு காப்­பிக் கடை­யி­லும் 'ஹுவா ஸாய்' கிளை­க­ளி­லும் தொற்­றுப் பர­வல் சாத்­தி­யம் உண்டு என்று சுகா­தார அமைச்சு தமது அறிக்­கை­களில் குறிப்­பிட்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஏழு 'ஹுவா ஸாய்' கிளை ஊழி­யர்­களில் அறு­வர் ஒரே வீட்­டில் வசிப்­ப­வர்­கள். மலே­சிய, வியட்­னா­மிய நாடு­க­ளைச் சேர்ந்த அவர்­கள் இரு வெவ்­வேறு கிளை­களில் வேலை பார்ப்­ப­வர்­கள்.

எஞ்­சிய அந்த ஒரு ஊழி­யர், ஆங்­கர்­வேல், சிராங்­கூன் கிளை­களில் வேலை பார்ப்­ப­வர் என்­றும் ஆங்­கர்­வேல் உண­வங்­கா­டி­யைத் தாண்­டி­யும் தொற்­றைப் பரப்­பி­ இருக்­க­லாம் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் உட்­கார்ந்து சாப்­பி­டு­வது அனு­ம­திக்­கப்­ப­டாத பட்­சத்­தில் உணவை வாங்­கிக் கொண்டு செல்­வ­தால் கிரு­மித்­தொற்று ஏற்­படும் சாத்­தி­யம் குறைவே என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக்.

சமைத்த உணவு வழி தொற்று பர­வும் அபா­ய­மும் உண்டு என்று குறிப்­பிட்ட அவர், நல்ல சுகா­தா­ர­மும் முகக் கவ­சம் அணி­யும் பழக்­க­மும் இருந்­தால் தொற்று ஏற்­படும் வாய்ப்பு மிகக் குறைவு என்­றார்.

மாசு படிந்த உண­வின் மேல்­பரப்­பா­லும் உண­வுப் பொட்­ட­லங்­களா­லும் கொவிட்-19 தொற்று பர­வும் சாத்­தி­யம் மிகக் குறைவு என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு முன்­ன­தாக அறி­வு­றுத்தி இருந்­தது. இதற்­கான ஆதா­ர­மும் இது­வரை இல்லை என்­றது அமைப்பு.

உணவு பானக் கடை­கள் தொடர்­பான கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­களின் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ள­தெ­னக் குறிப்­பிட்ட பேரா­சி­ரி­யர் குக், இதன் தொடர்­பில் பதற்­றம் வேண்­டாம் என்று எச்­ச­ரித்­தார்.

"நம்­மில் பல­ரும் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­கி­றோம். வீட்­டில் இருந்து வேலை செய்ய முடி­யாத ஊழி­யர்­களே தொற்­றுக்கு ஆளா­கும் அபா­யத்­தில் சிக்­கு­கின்­ற­னர்," என்று அவர் சுட்­டி­னார்.