தகுதி அடிப்படையை கட்டிக்காக்க வேண்டும்

2 mins read
08b826da-da53-4643-9f87-94de7076d420
-

சிங்­கப்­பூ­ரில் தகுதி அடிப்­ப­டை­

யி­லான அணு­கு­முறை என்­பது தொடர்ந்து கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரும் ஒன்று என்­றும் இதி­லி­ருந்து தவ­றி­வி­டக்­கூ­டாது என்­றும் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யுள்­ளார்.

இத­னால் தகுதி அடிப்­படை என்­பதை பரந்த, விரிந்த நோக்­கில் பார்க்க வேண்­டும் என்­றும் அதை ஒரு முறை வரும் தேர்வு அடிப்­

ப­டை­யில் முடிவு செய்ய முடி­யாது என்­றும் அமைச்­சர் சான் தெரி­வித்­தார்.

நேற்று கிட்­டத்­தட்ட 10,000 கல்­வி­யா­ளர்­கள் கலந்­து­கொண்ட கல்வி அமைச்­சின் 'எக்­சல் ஃபெஸ்ட்' என்ற மெய்­நி­கர் ஆசி­ரி­யர்­கள் மாநாட்­டில் பேசிய அமைச்­சர், "பலர் தங்­கள் வாழ்­வின் வெவ்­வேறு பரு­வத்­தில் வெவ்­வேறு சிறப்­புத் திறன்­க­ளைப் பெறு­கின்­ற­னர்.

"பலர் பல வழி­களில் தங்­கள் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ளும் வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்­டும். இதில் வெற்றி பெறு­ப­வர்­கள் கூட மெத்­த­ன­மாக இருக்­க­லா­காது," என்று அவர் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூர் அனை­வரை­யும் உள்­ ள­டக்­கிய நாடாக இருக்க, வச­தி­ உடையோர் வசதி குறைந்தோருக்கு உத­வக் கட­மைப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர் கூறி­னார்.

மூன்று நாட்­க­ளாக நடை­பெ­றும் இந்த மாநாட்­டில் கல்­வித் துறை­யில் ஆக அண்மைய போக்­கு­கள், புத்­தாக்க முயற்­சி­களில் வெற்றி பெற்ற பள்­ளி­க­ளின் சாதனைகள் போன்றவை காட்­சிக்கு வைக்­கப்­பட்­டன.

சிக்­க­லான உல­கில் வருங்­கால சந்­த­தி­யி­னர் எதிர்­நோக்­கும் கால­கட்­டத்­தில் முக்­கி­ய­மான பண்­பு­

நெ­றி­கள் குறித்த முக்­கி­யத்

­து­வத்தை ஆசி­ரி­யர்­க­ளுக்கு திரு சான் வலி­யு­றுத்­தி­னார்.

அதில் ஒன்­று­தான் தகுதி அடிப்­ப­டை­யி­லான அணு­கு­முறை என்று விளக்­கிய திரு சான், சிங்­கப்­பூ­ரர்­கள் திறந்த மனப்­பான்­மை­யு­ட­னும் அனை­வரை­யும் உள்­ள­டக்­கிச் செல்­ப­வர்­க­ளா­க­வும் இருக்க வேண்­டும் என்­றும் சொன்­னார். அத்­து­டன் சிங்­கப்­பூ­ரர்­கள் நம்­ப­க­மான, கொள்­கைப் பிடிப்­பு­டைய மக்­க­ளாக இருக்க வேண்­டும் என்­றும் தெளிவுப­டுத்­தி­னார்.

நான்கு மில்­லி­யன் குடி­மக்­க­ளைக் கொண்ட ஒரு நாடு எப்­பொ­ழு­தும் சிறந்த யோச­னை­களை கொண்­டி­ருப்­பது இய­லா­மல் போக­லாம். ஆனால், நாம் உல­கத்­து­டன் தொடர்­பில் இருக்­கும் பட்­சத்­தில் நாம் சிறந்து விளங்க முடி­யும்.

"உல­கத்­து­டன் தொடர்­பில் இருப்­பது என்­பது, ஒரு மாற்று வழித் தேர்வு அல்ல, அது நாம் உயிர்­வாழ்­வ­தற்­கான உத்தி," என்று திரு சான் கூறி­னார்.

கல்வி அமைச்சின் ஆசிரியர் மாநாட்டில் சான் சுன் சிங் உரை