உள்ளூர் திறனாளர்களை உருவாக்க தளவாடத் துறை பயிற்சித் திட்டம்

உள்ளூர் திறனாளர்களை உருவாக்க தளவாடத் துறை பயிற்சித் திட்டம்

2 mins read
76d3caec-8cf3-41bf-a528-e73ce88e30fe
-

மேசை, நாற்­காலி போன்­ற­வற்­றைப் பொருத்­து­வது, உள்­அலங்­கார வடி­வ­மைப்பு போன்­ற­வற்­றுக்கு மாற விரும்­பும் பணி­யி­டைக்­கால ஊழி­யர்­கள் புதிய திட்­டத்­தின் வழி தங்­க­ளது விருப்­பத்தை நிறை­வேற்­ற­லாம். நிபு­ணத்­துவ வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றத் திட்­டம் அவர்­

க­ளுக்­குக் கைகொ­டுக்­கும்.

உள் அலங்­கார சிறப்பு நிபு­ணர்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முதல் தொகுப்பு அடுத்த மாதம் தொடங்­கும். அடுத்த ஈராண்­டு­களில் 70 பயிற்­சி­யா­ளர்­களை உரு­வாக்­கு­வது இதன் நோக்­கம்.

இதன் மூலம் உள்­அ­லங்­கார வடி­வ­மைப்­புச் சேவை­களில் உள்­ளூர் நிபு­ணர்­களைப் பெறமுடி­யும்.

வணி­கத் திட்­டங்­க­ளி­லும் குடி­யி­ருப்­புக்­கான திட்­டங்­க­ளி­லும் அவற்றுக்கான பணி இடத்­தி­லேயே மேசை, நாற்­காலி, கட்­டில் போன்ற­வற்­றைத் தேவைக்­கேற்ற வகை­யில் பொருத்­து­வது போன்ற சேவை­களும் இதில் அடங்­கும்.

இதற்­கான பயிற்­சித் திட்­டம் நேற்று மெய்­நி­கர் வழி­யாக அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யும் சிங்­கப்­பூர் தள­வா­டத் தொழில் மன்­ற­மும் இத்­திட்­டத்தை அறி­மு­கம் செய்­தன.

சிங்­கப்­பூ­ரின் உள் அலங்­கா­ரத் தள­வாட வர்த்­த­கப் பிரி­வில் வளர்ந்து வரும் தேவை­களை இத்­திட்­டம் பூர்த்தி செய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­தப் பிரி­வில் ஆண்­டுக்கு $3 பில்­லி­யன் அளவுக்கு வர்த்­த­கம் நடை­பெ­று­வ­தாக மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லில் சிங்­கப்­பூ­ரின் தள­வா­டத் தொழில்­துறை பாதிக்­கப்­பட்டுள்­ள­தா­க­வும் உள் அலங்­கா­ரப் பொருட்­

க­ளைத் தயா­ரிக்­கும் துறை­யில் ஊழி­யர் பற்­றாக்­குறை இருப்­ப­தா­க­வும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் கூறி­னார்.

சிங்­கப்­பூர் தள­வா­டத் தொழில் மன்­றத்­தின் புர­வ­ல­ரான இவர், உள் அலங்­கா­ர வடிவமைப்புத் துறை­யில் உள்­ளூர் திற­னா­ளர்­க­ளுக்கு மறு

­ப­யிற்சி அளித்து திறன்­களை வளர்ப்­ப­தன் மூலம் தனித் திறன் வாய்ந்த நிபு­ணர்­களை நிறு­வ­னங்­கள் உரு­வாக்க முடி­யும் என்­றார்.

இவ்­வாறு செய்­வது இந்­தத் துறை­யில் இளைய தலை­மு­றை­

யி­னரை ஈர்க்­கக் கைகொ­டுக்­கும் என்­றும் இவர் தெரி­வித்­தார்.