மேசை, நாற்காலி போன்றவற்றைப் பொருத்துவது, உள்அலங்கார வடிவமைப்பு போன்றவற்றுக்கு மாற விரும்பும் பணியிடைக்கால ஊழியர்கள் புதிய திட்டத்தின் வழி தங்களது விருப்பத்தை நிறைவேற்றலாம். நிபுணத்துவ வாழ்க்கைத்தொழில் மாற்றத் திட்டம் அவர்
களுக்குக் கைகொடுக்கும்.
உள் அலங்கார சிறப்பு நிபுணர்களை உருவாக்குவதற்கான முதல் தொகுப்பு அடுத்த மாதம் தொடங்கும். அடுத்த ஈராண்டுகளில் 70 பயிற்சியாளர்களை உருவாக்குவது இதன் நோக்கம்.
இதன் மூலம் உள்அலங்கார வடிவமைப்புச் சேவைகளில் உள்ளூர் நிபுணர்களைப் பெறமுடியும்.
வணிகத் திட்டங்களிலும் குடியிருப்புக்கான திட்டங்களிலும் அவற்றுக்கான பணி இடத்திலேயே மேசை, நாற்காலி, கட்டில் போன்றவற்றைத் தேவைக்கேற்ற வகையில் பொருத்துவது போன்ற சேவைகளும் இதில் அடங்கும்.
இதற்கான பயிற்சித் திட்டம் நேற்று மெய்நிகர் வழியாக அறிமுகம் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் ஊழியரணியும் சிங்கப்பூர் தளவாடத் தொழில் மன்றமும் இத்திட்டத்தை அறிமுகம் செய்தன.
சிங்கப்பூரின் உள் அலங்காரத் தளவாட வர்த்தகப் பிரிவில் வளர்ந்து வரும் தேவைகளை இத்திட்டம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரிவில் ஆண்டுக்கு $3 பில்லியன் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக மதிப்பிடப்படுகிறது.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் சிங்கப்பூரின் தளவாடத் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள் அலங்காரப் பொருட்
களைத் தயாரிக்கும் துறையில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதாகவும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கூறினார்.
சிங்கப்பூர் தளவாடத் தொழில் மன்றத்தின் புரவலரான இவர், உள் அலங்கார வடிவமைப்புத் துறையில் உள்ளூர் திறனாளர்களுக்கு மறு
பயிற்சி அளித்து திறன்களை வளர்ப்பதன் மூலம் தனித் திறன் வாய்ந்த நிபுணர்களை நிறுவனங்கள் உருவாக்க முடியும் என்றார்.
இவ்வாறு செய்வது இந்தத் துறையில் இளைய தலைமுறை
யினரை ஈர்க்கக் கைகொடுக்கும் என்றும் இவர் தெரிவித்தார்.

