'தொற்று இல்லை' சான்றிதழை கேட்டுப் பெற வேண்டியது விமான நிறுவனங்களின் பொறுப்பு

'தொற்று இல்லை' சான்றிதழை கேட்டுப் பெற வேண்டியது விமான நிறுவனங்களின் பொறுப்பு

2 mins read
8948d282-7fd4-437f-a195-82038f57ade5
-

சிங்­கப்­பூர் திரும்­பும் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் கொவிட்-19 கிருமி தொற்­ற­வில்லை என்­ப­தற்­கான பரி­சோ­த­னைச் சான்­றி­தழ் வைத்­தி­ருப்­பதை விமான நிறு­வ­னங்­கள் உறு­தி­செய்ய வேண்­டும் என சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்து உள்­ளது.

சாங்கி விமான நிலை­யத்­தைப் பயன்­ப­டுத்­தும் அனைத்து விமான நிறு­வ­னங்­க­ளுக்­கும் இந்­தப் புதிய விதி­முறை தெரி­விக்­கப்­பட்டு உள்­ள­தாக ஆணை­யத்­தின் அதி­காரி மார்­க­ரெட் டான் கூறி­னார். சேனல் நியூஸ் ஏஷியா எழுப்­பிய கேள்­வி­

க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கை­வில் அவர் இவ்­வி­வ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ருக்­கான விமா­னத்­தில் ஏற அனு­ம­திக்­கு­முன்­னர் சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் உள்­ளிட்ட எல்­லாப் பய­ணி­களும் பிசி­ஆர் பரி­சோ­தனை முடி­வைக் காட்­டும் சான்­றி­தழ் வைத்­தி­ருக்­கி­றார்­களா என்­பதை விமான நிறு­வ­னங்­கள் சோதனை செய்ய வேண்­டும் என்­றார் அவர்.

அனைத்­து­லக அங்­கீ­கா­ரம் பெற்ற அல்­லது சிங்­கப்­பூ­ரின் சுகா­தார அமைச்சு பரிந்­து­ரைத்­துள்ள சோத­னைக்­கூ­டம், மருந்­த­கம் அல்­லது மருத்­து­வ­ம­னை­களில் அந்­தச் சான்­றி­த­ழைப் பெற்­றி­ருப்­பது அவ­சி­யம்.

"பிசி­ஆர் பரி­சோ­தனை முடிவு சான்­றி­தழ் வைத்­தி­ரா­த­வ­ரை­யும் கிருமி தொற்­றி­ய­தா­கத் தெரி­விக்­கும் சான்­றி­தழ் வைத்­தி­ருப்­போ­ரை­யும் சிங்­கப்­பூர் விமா­னத்­தில் ஏற அவை அனு­ம­திக்­கக்­கூ­டாது.

இது­போன்ற கார­ணங்­க­ளால், இங்கு வந்த பின்­னர்­கூட அத்­த­கை­யோர் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

"புறப்­பட்ட இடத்­திற்கே அவர்­

க­ளைத் திருப்பி அனுப்ப வேண்­டி­யது விமான நிறு­வ­னங்­க­ளின் பொறுப்பு," என்­றார் திரு­வாட்டி டான்.

சுகா­தார அமைச்சு கடந்த வாரம் வெளி­யிட்ட ஓர் அறி­விப்­பைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் நட­வ­டிக்கை பற்­றிய தக­வல் வெளி­யாகி உள்­ளது.

சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­ப­டு­வ­தற்கு 72 மணி நேரம் முன்­ன­தாக கொவிட்-19 பிசி­ஆர் பரி­சோ­தனை செய்து கிருமிதொற்­ற­ வில்லை என்­ப­தற்­கான சான்­றி­தழை சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் சமர்ப்­பிக்க வேண்­டி­யது கட்­டா­யம் என்­பது அந்த அறி­விப்பு.

இருப்­பி­னும் பய­ணத்­திற்கு 21 நாட்­கள் முன்­ன­தாக கிரு­மித்­தொற்று அபா­யம் குறை­வாக உள்ள ஆஸ்­தி­ரே­லியா, புருணை, சீனா, நியூ­சி­லாந்து, ஹாங்­காங், மக்­காவ் போன்­ற­வற்­றில் தங்கி இருந்­தோ­ருக்கு இந்­தப் புதிய விதி­மு­றை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ள­னர்.