ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை பற்றி தெளிவு வேண்டும்: முஃப்தி

ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை பற்றி தெளிவு வேண்டும்: முஃப்தி

1 mins read
0c36601c-c05e-44bd-b053-305385b337c8
-

ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நடத்­தை­கள் பற்றி இங்­குள்ள முஸ்­லிம் சமூ­கத்­துக்கு மீண்­டும் அறி­வு­றுத்­தப்­பட வேண்­டும் என்­றும் இஸ்­லா­மியத் தலைவர்கள் தவறு இழைப்­ப­வர்­கள் மீது வலு­வான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் முஃப்தி கூறி­யுள்­ளார்.

நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு 780க்கும் மேற்­பட்ட இஸ்­லா­மி­யத் தலை­வர்­க­ளு­டன் இணை­யம் வழி­யாக நடந்த ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சி­யில் டாக்­டர் நசி­ரு­தீன் முக­மது நசிர் பேசி­னார்.

சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய இஸ்­லா­மி­யத் தலை­வ­ரான டாக்­டர் நசி­ரு­தீன் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நடத்தை எது என்­ப­தில் இஸ்­லா­மி­யத் தலை­வர்­கள் தெளி­வாக இருக்க வேண்­டும் என்­றார்.

"பெண்­க­ளுக்கு தீங்­கி­ழைப்­பதை நகைச்­சுவை என்று கூறும்­போது அல்­லது பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மீது பழி சுமத்­தப்­பட்டு தவறு செய்­த­வர்­கள் தப்­பித்­துக்­கொள்­ளும்­போது, நாம் நிலைப்­பாடு இன்றி இருக்­கக்­கூ­டாது," என்று டாக்­டர் நசி­ரு­தீன் கூறி­னார். பெண் இஸ்­லா­மி­யத் தலை­வர்­களை தர­வ­ரி­சைப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்கு பாலியல் ரீதியில் ஆபத்து ஏற்­ப­டுத்­தும் இணை­யக் கணக்­கெ­டுப்பு பற்றி கடந்த வாரம் தெரிய வந்­தது. மீவீ எனும் சமூக ஊடகத்தில் இருந்த அந்த கணக்கெடுப்பு அகற்றப்பட்டு விட்டது.