சுங்கத் தீர்வை செலுத்தாமல் கள்ளத்தனமாக இங்கு 63 கிலோகிராம் காய்கறியை இறக்குமதி செய்தி காய்கறி வர்த்தகருக்கு 4,500 வெள்ளி அரபாதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று அதனைத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் லியாவ் இயோ சியாப் எனும் நபர் இறக்குமதி செய்த பொருட்களில் 63 கிலோகிராம் காய்கறிகள் இருந்ததை சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இயோ சியாப் சந்தைக் காய்கறி விநியோக நிறுவனத்தின் உரிமம் பெற்றவர் அவர்.
கள்ளக் காய்கறிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். சிங்கப்பூரில் காய்கறி இறக்குமதி செய்பவர்கள் சிங்கப்பூர் உணவு அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கவேண்டும். காய்கறி இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெறுவதும் ஒவ்வொரு சரக்கைப் பற்றிய முழு விவரம் அளிப்பதும் அவற்றில் அடங்கும்.
"சட்ட விரோதமாக இறக்குமதி செய்யும் காய்கறிகள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பது தெரியாது. அதனால் அவை உணவுப் பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம்," என்பது அமைப்பு.
அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து உள்ள காய்கறிகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல்நலக் கேடு ஏற்படக்கூடும் என்றும் அமைப்பு கூறியது.

