தேசிய தின அணிவகுப்புக்கு தயாராகும் மரினா பே மிதக்கும் மேடை

தேசிய தின அணிவகுப்புக்கு தயாராகும் மரினா பே மிதக்கும் மேடை

2 mins read
a5f83193-9bfc-4f6a-98f5-0693cb5d9fae
மரினா பே மிதக்கும் மேடையில் கடந்த மே மாத 27ம் தேதி அன்று மேடை போன்ற அமைப்பைப் பணியாளர்கள் வைத்துக்கொண்டிருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மரினா பே மிதக்­கும் மேடை­யில் இவ்­வாண்டு தேசிய தின அணி­ வ­குப்­புக்­கான ஆயத்­தப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் அணி­வ­குப்­பில் கலந்­து­கொள்ள முடி­யும் என்­பது உறு­தி­யா­கத் தெரி­யா­த­போ­தும், ஆயத்­தப் பணி­கள் நடந்து வரு­கின்­றன.

இவ்­வாண்டு பிப்­ர­வரி முதல் மே வரை, தேசிய தின அணி­வ­குப்­புக்குத் தேவை­யான பொருட்கள் சேவை­களுக்கான ஐந்து குத்­த­கை­க­ளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. விளம்­ப­ரங்­க­ளுக்­கான பொருட்­கள், ஆடை­கள், ஒளிக் கட்­ட­மைப்­பு­கள், மழைப் பொழி­வுக்­கான சிறப்புக் காட்சி அமைப்­பு­கள் ஆகி­யவை தேவை என குத்­த­கை­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குத்­தகை ஆவ­ணங்­கள் அர­சாங்­கத்­தின் ஜீபிஸ் (Gebiz)இணை­ய­வா­ச­லில் இடம்­பெற்­றுள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறி­யது.

மழை­ப்பொ­ழிவு காட்சி அமைப்­புக்­குக் கோரும் குத்­தகை ஆவ­ணங்­களில், அணி­வ­குப்பு வெளிப்­பு­றத்­தில் நடை­பெ­றும் என்று கூறப்­பட்­டது. தண்­ணீர் அள­வுக்கு ஏற்ப தண்­ணீ­ரில் நக­ரும் காட்சி அமைப்பு தேவை என்­றும் குறிப்­பி­டப்பட்­டது.

மேலும், கொவிட்-19 சூழல் தொடர்ந்து மாறிக்­கொண்டு இருப்­ப­தால், தேவை­யான சேவை­களை பற்­றிய முழு­மை­யான விவ­ரங்­க­ளைத் தற்­போ­தைக்கு தெரி­விக்க முடி­யாது என்­றும் குத்­தகை ஆவ­ணங்­களில் கூறப்பட்டது.

இந்­நி­லை­யில் மரினா பே மிதக்­கும் மேடை­யில் ஜூலை 3ஆம் தேதி வரை பரா­மரிப்­புப் பணி நடை­பெ­று­கிறது என்று கூறும் அறி­விப்பு பல­கை­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு இரண்டு ராட்­ச­தத் திரை­கள் வைக்­கப்­பட்­டி­ருந்­த­ன என்றது ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ்.

மரினா பே மிதக்­கும் மேடை­யில் கடை­சி­யாக நடந்த தேசிய தின அணி­வ­குப்­பில் அத்­த­கைய திரை­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

கொவிட்-19 சூழலால் கடந்த ஆண்டு தேசிய தின அணி­வகுப்பு சில இடங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டது. கிருமிப் பரவல் கட்டுக்குள் இருந்தால், இவ்வாண்டு அணிவகுப்பு மிதக்கும் மேடையில் நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் முன்னதாகக் கூறியிருந்தார்.