தடுப்பூசி போடுவதில் குளறுபடி

தடுப்பூசி போடுவதில் குளறுபடி

1 mins read
1d7c7a80-6084-47d2-a62d-209bac42a9d2
-

மார்டனா கொவிட்-19 முதல் தடுப்பூசி 16 வயது இளையர் ஒருவருக்குத் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.

இந்தத் தவறு கோலாம் ஆயர் சமூக மன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகுதான் அந்த இளையர் 18 வயதுக்கு குறைவானவர் எனத் தெரிய வந்தது.

தடுப்பூசி ஊழியர்கள் அந்த இளையரின் வயதைச் சரிபார்த்திருக்கவேண்டும் என்று கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் கூட்டறிக்கையின் வழி தெரிவித்தன. நடந்தவற்றால் ஏற்பட்டுள்ள அசௌகர்யத்திற்கும் பதற்றத்திற்கும் வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சுகளின் அறிவிப்பு கூறியது.