விளையாட்டுகள் மூலம் இளம் குற்றவாளிகள் பயனடைவர்

விளையாட்டுகள் மூலம் இளம் குற்றவாளிகள் பயனடைவர்

2 mins read
625c4fab-eb02-4a1f-9b55-7708f5cf5ba6
-

விளையாட்டுகள் என்றால் நிறு பிள்ளைகளுக்கானவை என்ற காலம் மாறிவிட்டது. இப்போது அப்படிப்பட்ட விளையாட்டுகள் மூலம் இளம் குற்றவாளிகள் தங்கள் நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவழிக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இந்த விளையாட்டுகளை வழிவமைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

இரண்டு முக்கியமான மறுவாழ்வு திட்டங்களை உள்ளடக்கிய மின்னிலக்க விளையாட்டுகள் உருவாக்கப்படும்.

'லா அண்ட் ஆர்டர்' (Law and Order) மற்றும் 'விக்டிம் இம்பெக்ட்' (Victim Impact) ஆகிய இரு விளையாட்டுகளை நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனை பெற்றவர்கள் விளையாடும்போது உண்மையான வாழ்க்கை சவால்களைச் சந்திப்பது போன்ற அனுபவத்தைப் பெறுவதோடு அவற்றைச் சமாளிக்க எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

'லா அண்ட் ஆர்டர்' விளையாட்டு, இங்குள்ள சட்ட திட்டங்களையும் சமுதாயத்தில் சட்ட ஒழுங்கின் பங்கு பற்றியும் இளம் குற்றவாளிகள் கற்றுக்கொள்வர்.

'விக்டிம் இம்பெக்ட்' விளையாட்டு, தாங்கள் புரியும் குற்றங்களால் சமூகத்தில் உள்ளவர்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதை இளம் குற்றவாளிகளுக்கு உணர்த்தும். அது அவர்களுக்குள் குற்றம் புரிவதற்கான எண்ணத்தைத் துடைத்தொழிக்க உதவும்.

"பங்கேற்பாளர்கள் குறிப்பான இளையர்கள் விளையாட்டுகளில் தங்கள் கவனத்தை அதிகம் செலவிடுகிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த விளையாட்டுத் திட்டம், பங்கேற்பாளர்களுக்குத் தங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை எடுத்துரைக்கும்.

"இந்த அனுபவம் அவர்களின் மறுவாழ்வுக்கான அடித்தளத்தை வலுவாக்கும். இது மின்னிலக்க முறையில் நடத்தப்படுவதால், அது இளம் குற்றவாளிகளின் கணினித் தொழில்நுட்பத் திறனையும் ஆர்வத்தையும் வளர்க்க உதவும்," என்றார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர்.