முதியோர் விடுதிகளில் பார்வையாளருக்குத் தடை

முதியோர் விடுதிகளில் பார்வையாளருக்குத் தடை

1 mins read
c882207d-ee5c-4424-b7b4-076df3470d36
படம்: சாவ் பாவ் -

முதியோர் வசிக்கும் பராமரிப்பு விடுதிகளுக்குப் பார்வையாளர்கள் யாருக்கும் இன்று முதல் ஜூன் 20ஆம் தேதி வரை அனுமதி இருக்காது. அண்மைய சமூகத் தொற்று நிலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

முதியோர் பராமரிப்பு விடுதிகளில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்துக் கொள்வதும் அங்கிருந்து தொற்று பரவுவதைத் தடுப்பதும் இந்தத் தற்காலிகத் தடையின் நோக்கம் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. அத்தகைய நிலையங்களுடன் சேர்ந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை நவடிக்கைகளைப் பலப்படுத்த அமைச்சு செயல்படும்.

பார்வையாளர்கள் பாதுகாப்பாக வந்துசெல்லும் நடைமுறையை மீண்டும் தொடங்க விடுதிகளுக்கு அமைச்சு உதவும்.

ஹவ்காங்கில் செயல்படும் மைண்ட்ஸ்வில் என்ற அறிவுமந்த குறைபாடு உள்ளோருக்கான இல்லத்தில் கொவிட்-19 தொற்றுக்குழுமம் தெரிய வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. அந்தக் குழுமத்தில் கிருமி தொற்றிய 27 பேர் இருக்கிறார்கள். முதியோர் விடுதிகளுக்குப் பார்வையாளர்கள் செல்ல சென்ற ஆண்டு மூன்று மாத கால தடை நடப்பில் இருந்தது. பிறகு அந்தத் தடை சென்ற ஆண்டு ஜூன் 19ல் அகன்றது.