சீன மாநில குறுகியகால பயணிகள் வர தடை

2 mins read
0e7d9ed9-8614-4195-9197-2445813c64d6
சீனா­வின் குவாங்­டோங் மாநி­லத்­தின் தலைநகரான குவாங்சூவில் சென்ற மாதம் முதல் கொவிட்-19 தொற்று கூடி வருகிறது. அதிகாரிகள் பரிசோதனை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்­கப்­பூர் புறப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக 21 நாட்­க­ளுக்­குள் சீனா­வின் குவாங்­டோங் மாநி­லத்­திற்­குச் சென்று இருக்­கும் குறுகிய கால பய­ணி­கள் இங்கு வர தடை விதிக்­கப்­பட்டுள்ளது.

அந்­தத் தடை இன்று இரவு 11.59 மணி முதல் நடப்­புக்கு வரு­கிறது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வின் குவாங்­டோங் மாநி­லத்­தில் கொவிட்-19 தொற்று அதி­க­மாகி இருக்­கிறது. அத­னால் எல்லைக் கட்­டுப்­பாடு கடு­மை­யாகி இருக்­கிறது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இங்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக 21 நாட்­க­ளுக்­குள் குவாங்­டோங் சென்று இருக்­கும் சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்ட கால அனு­ம­தி­ உள்ளவர்கள் இங்கு தரை இறங்­கி­ய­தும் தங்­கள் வசிப்­பி­டத்­தில் ஏழு நாட்­கள் தனி­மை­யில் இருக்க வேண்­டும்.

அவர்­கள் இங்கு தரை இறங்­கு­ம்போது பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­ப­ட­வேண்­டும். தனி­மைக் காலம் முடி­யும் போதும் அந்­தச் சோத­னை­யைச் செய்­து­கொள்­ள­வேண்­டும்.

குவாங்­டோங் போயி­ருப்­போர் தவிர சீனாவில் இருந்து வரு­கின்ற இதர எல்லா பணி­களும் இங்கு தரை இறங்­கும்போது தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­று­வதற்­குப் பதிலாக கொவிட்-19 பிசிஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டிய நிபந்­தனை தொட­ரும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

குவாங்­டோங் மாநி­லத்­தின் தலை­ந­க­ரான குவாங்­சூ­வில் சென்ற மாதம் முதல் தொற்று அதி­க­மாகி விட்­டது. அதிக தொற்­றுள்ள இடங்­களில் சில­வற்­றில் பரி­சோ­த­னை­இயக்­கத்தை வேகப்­ப­டுத்தி அதன் மூலம் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் கடு­மை­யா­கப் பேராடி வரு­கி­றார்­கள்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரும் தென் கொரி­யா­வும் இரு­த­ரப்பு விமா­னப் பய­ணத்தைத் தொடங்­கும் வாய்ப்­பு­கள் குறித்து கடந்த மார்ச் முதல் பேசி வரு­வ­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டுள்­ளது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள பய­ணத்­து­றைக்கு ஊக்கமூட்­டும் வகை­யில் இதர நாடு­க­ளு­டன் இரு தரப்பு பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்து­கொள்ள தென் கொரிய அரசு முய­லும் என்று அந்த நாட்­டின் பிர­த­மர் ஹோங் நாம்- கி அண்­மை­யில் தெரி­வித்து இருந்­தார்.

இத்தகைய பயண ஏற்­பாட்டின் படி, கடு­மை­யான தனிமை நிபந்­தனை­கள் இன்றி இரு நாட்டு அல்­லது பல நாட்டு பய­ணி­கள் பரஸ்­பர பய­ணங்­களை மேற்­கொள்­ள­லாம் என்பது குறிப்பிடத்தக்கது.