உட்லண்ட்ஸ் மின்தூக்கியில் ‘பிஎம்டி’ தீப்பிடித்து 20 வயது இளைஞர் உயிரிழந்தார்

மின்­தூக்­கி­யில் தமது தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னத்­து­டன் (பிஎம்டி) சென்ற 20 வயது ஆட­வர் ஒரு­வர், அதில் ஏற்­பட்ட தீயால் உயி­ரி­ழந்து­விட்­டார். உட்­லண்ட்ஸ் டிரைவ் 16 புளோக் 537ல் அமைந்­துள்ள மின்­தூக்­கி­யில் நேற்று முன்­தி­னம் இரவு தீச்­சம்­ப­வம் ஏற்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் ஃபேஸ்புக் பதி­வில் நேற்று தெரி­வித்­தது.

இரவு 11.25 மணிக்­குத் தக­வல் கிடைத்து அதி­கா­ரி­கள் வரு­வ­தற்­குள் அக்­கம்­பக்­கத்­தி­னர் வாளி­களில் தண்­ணீர் கொண்டு தீயை அணைத்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

கடு­மை­யான தீக்­கா­யங்­க­ளு­டன் கூ டெக் புவாட் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட ஆட­வர், பின்பு இறந்­து­விட்­டதை போலிஸ் பேச்­சா­ளர் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­னார்.

சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை நடந்­து­வ­ரு­கிறது என்­றும் இதில் சூது ஏதும் இருப்­ப­தாக சந்­தே­கிக்­க­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. தீச்­சம்­ப­வம் கார­ண­மாக முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக புளோக்­கில் இருந்த சுமார் 90 பேர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

'பிஎம்டி' தொடர்­பான மின்­சார அம்­சமே நெருப்பு ஏற்­ப­டக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கும் என்று ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், 'UL2272' வகை அல்­லாத 'பிஎம்டி'கள் மற்­றும் சட்­ட­வி­ரோ­த­மாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட 'பிஎம்டி'களால் தீ அபா­யம் உள்­ளது என்­றும் பொது­மக்­கள் பாது­காப்­புக்கு இவை பங்­கம் விளை­விக்­க­லாம் என்­றும் குடி­மைத் தற்­காப்­புப் படை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!