ஆய்வாளர்கள்: உயரும் கடல் மட்டம் தொடர்பான என்டியு ஆய்வு மதிப்புமிக்கது

கிட்­டத்­தட்ட 10,000 ஆண்­டு­களுக்கு முன், சிங்­கப்­பூ­ரின் கடல் மட்­டம் தற்­போது இருப்­ப­தைக் காட்­டி­லும் குறைந்­தது 20 மீட்­டர் குறை­வாக இருந்­தது. இருப்­பி­னும் பனி­யு­கம் ஒரு முடி­வுக்கு வந்த நிலை­யில் பனிப்­பா­றை­கள் உரு­கிப் சமுத்­தி­ரங்­கள் மற்­றும் கடல்­க­ளின் நீர் மட்­டம் அடுத்த ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்டு­க­ளுக்கு உயர்ந்­து­கொண்டே போனது.

நாள­டை­வில் உய­ரும் நீர் மட்­டமே வெள்­ள­மென வந்து சிங்­கப்­பூ­ரின் தெற்கு கரை­யோ­ரத்­தின் சதுப்­பு­நி­லக் காட்டை அழித்­தது என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழத்­தைச் சேர்ந்த பரு­வ­நிலை விஞ்­ஞா­னி­கள் புதிய ஆய்வு ஒன்­றில் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆய்­வுக் குழு­வின் கண்­டு­பி­டிப்பு­கள் 'தி ஹொல­சீன்' என்ற அறி­வி­யல் சஞ்­சி­கை­யில் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

தற்­போது உய­ரும் கடல் நீர் மட்­டம் இனி வரும் ஆண்­டு­களில் நாட்டை எவ்­வாறு பாதிக்­கும் என்­பது குறித்து அவர்­க­ளின் கண்­டு­பி­டிப்­பு­கள் ஓர் ஆழ­மான பார்­வை­யைத் தந்­துள்­ளன.

சுமார் 10,000 ஆண்­டு­க­ளுக்கு முன் தொடங்கி 5,000 ஆண்­டு­களுக்கு முன் வரை கடல் மட்­டம் ஆண்­டுக்கு 10 மில்­லி­மீட்­டர் முதல் 15 மில்­லி­மீட்­டர் வரை உயர்ந்­து­கொண்டு போனதை ஆய்­வா­ளர்­கள் கண்­ட­றிந்­த­னர்.

மனித உமிழ்­வால் 20ஆம் நூற்­றாண்­டில் பூமி வெப்­ப­ம­ய­மாகி வந்­தது.

இன்று ஆண்­டுக்கு 3 முதல் 4 மில்­லி­மீட்­டர் வரை அதி­க­ரிக்­கும் நிலை­யில் கடல் மட்­டம் உள்­ளது.

பல ஆண்­டு­க­ளுக்கு முன் கடல் மட்­டம் எவ்­வாறு இருந்­தி­ருக்­கும் என்­ப­தைக் கண்­ட­றிய, ஆய்­வா­ளர்­கள் பூமி­யின் ஆழத்­தைத் தோண்ட வேண்­டி­யிருந்­த­தெ­னக் கூறி­னர்.

உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்­காக நிலத்­தில் இடப்­படும் துவாரங்­களை ஆயி­ரக்­க­ணக்­கில் ஆராய்ந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது. ஆழத்­தில் கிடைப்­ப­ன­வற்­றைக் கொண்டு சிங்­கப்­பூ­ரில் கடல் மட்ட அளவு எவ்­வாறு காலப்­போக்­கில் மாறி­யது என்­பதை அறு­தி­யி­ட­லாம் என்­ற­னர் ஆய்­வுக்­குழுவினர்.

"இந்த ஆய்வு மதிப்­பு­மிக்க ஒரு பதி­வா­கும். இதை எதிர்­கா­லத்­தில் மேலும் விரி­வு­ப­டுத்­திக் கூடு­தல் ஆராய்ச்­சி­களை மேற்­கொள்­ள­லாம்," என்று கேம்ப்­ரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த புவி­யி­யல் நிபு­ணர் பேரா­சி­ரி­யர் ஃபிலிப் கிப்­பார்ட் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!