தடுப்பூசி பற்றி போதிக்கும் புதிய தூதுவர் செயல்திட்டம்

முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மக்களிடம் புரிந்துணர்வை மேம்படுத்த முயற்சி

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டி­யது மிக­வும் முக்­கி­ய­மா­னது என்­பது பற்­றிய புரிந்­துணர்வு மேம்­பட உத­வும் வகை­யில் மக்­க­ளுக்கு விளக்­கம் அளிக்க நேற்று பொதுச் சுகா­தா­ரத் தூது­வர் செயல்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் ரோட்­டரி கிளப் அமைப்­பும் சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரத் துறை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தும் அந்­தத் திட்­டம், இந்த இரண்டு அமைப்­பு­களின் ஏற்­பாட்­டில் நடந்த தடுப்­பூசி தொடர்­பான கருத்­த­ரங்­கில் தொடங்­கப்­பட்­டது.

தடுப்­பூசி தொடர்­பான சரி­யான தக­வல்­களை மக்­க­ளுக்­குத் தெரி­வித்து, அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விக்­கும் நோக்­கத்­து­டன் அந்­தக் கருத்­த­ரங்­கிற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

வெவ்­வேறு தடுப்­பூ­சி­க­ளின் செயல்­பா­டு­க­ளுக்கு அதில் மருத் துவ நிபு­ணர்­கள் விளக்­கம் தந்­த­னர். கலா­சார, சமூக, இளை­யர் மற்­றும் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் திரு­வாட்டி லோ யென் லிங் அந்த மெய்­நி­கர் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு பேசி­னார்.

தடுப்­பூசி பற்­றிய தவ­றான தக­வல்­களைச் சரிப்­ப­டுத்த வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை அமைச்­சர் எடுத்­து­ரைத்­தார்.

சரி­யில்­லாத, தவ­றான வழி காட்டு­கின்ற தக­வல்­கள் சந்­தே­கத்­தை­யும் குழப்­பத்­தை­யும் ஏற்­ப­டுத்தி தடுப்­பூ­சியை நினைத்து மக்­கள் அச்­ச­ம­டை­யக்­கூ­டிய ஒரு நிலையை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றன. ஒரு­வர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தால் அவர் தன்­னை­யும் தன் அன்­பர்­களை­யும் பாது­காத்­துக்­கொள்ள முடியு­மென்­றார் திரு­வாட்டி லோ.

இது­வ­ரை­ தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் அதைப் போட்டுக்­ கொள்ள முன்­வ­ர­வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

கிடைக்­கின்ற தக­வல்­கள் நம்­ப­க­மான தரப்­பில் இருந்து வந்­த­வையா என்­ப­தைச் சரி­பார்த்த பிற­கு­தான் அவற்­றைப் பகிர வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

300 பேருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொண்ட நேற்­றைய கருத்­தரங்கை அடுத்து, சிங்­கப்­பூர் ரோட்டரி கிளப்­பின் பங்­கா­ளித்­துவ அமைப்­பு­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 150 பேர் முதல் பயிற்­சிப் பயி­லரங்­கில் பங்­கெ­டுத்­துக்­கொண்­ட­னர்.

தடுப்­பூ­சி­யின் முக்­கி­யத்­து­வம் பற்றி சமூ­கத்­தி­ன­ருக்­கு எடுத்துக் கூற தேவைப்­படும் தேர்ச்­சி­கள் அவர்­களுக்­குப் போதிக்­கப்­படும்.

பொதுமக்­கள் கேட்­கும் கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் அவர்­களுக்கு மருத்­துவ நிபு­ணர்­கள் பயிற்சி அளிப்­பார்­கள்.

மாண­வர் தூது­வர்­கள் செயல்­திட்­டம் ஒன்றைப் பற்­றிய விவ­ரங்­கள் முடி­வாகி வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று உட­ன­டி­யாகப் போகாது. அடுத்த ஓரிரு ஆண்­டு­க­ளுக்கு மக்­க­ளுக்­குத் தொடர்ந்து தடுப்­பூ­சி­யின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்த இந்த நீடித்த விழிப்­பு­ணர்­வுத் திட்­டம் உத­வும்," என்று சிங்­கப்­பூர் ரோட்­டரி கிளப்­பின் தொண்­டூ­ழி­யர் திரு நர­சிம்­மன் நாரா­ய­ணன், 56, கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!