அதிகமான தம்பதிகள் கடந்த ஆண்டில் பிள்ளைகளைத் தத்தெடுத்தனர்
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும் சிங்கப்பூரில் அதிகமான குடும்பங்கள் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்புப் பெற்றோராயினர். அவ்வாறு 564 குடும்பங்கள் பிள்ளைகளைக் கடந்த ஆண்டு தத்தெடுத்தன. அதற்கு முந்திய ஆண்டில் இந்த எண்ணிக்கை 530 என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஆகக் கடைசி தகவல்கள் கூறுகின்றன.
"அவ்வாறு வளர்ப்புப் பெற்றோரானவர்கள் 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் 30 வயதுக்கும்
50 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருந்தனர். அண்மைய ஆண்டுகளில் பிள்ளைகள் இல்லாத இளம் தம்பதிகள் உட்பட அதிகமான தம்பதிகள் வளர்ப்புப் பெற்றோராக முன்வந்தனர்," என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 543 பிள்ளைகள் வளர்ப்பு பெற்றோரின் பராமரிப்பில் இருந்தனர். அதற்கு முந்திய ஆண்டில் அந்த எண்ணிக்கை 545 ஆக இருந்தது. அந்தப் பிள்ளைகள் அல்லது இளையர்கள், நிராகரிக்கப்பட்டவர்களாக, துன்புறுத் தப்பட்டவர்களாக, பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்பட்டவர் களாக இருந்தனர்.
வளர்ப்பு பெற்றோரின் பராமரிப்பில் விடப்படாத பிள்ளை களும் இளையர்களும் சிறுவர் இல்லம், சிறுமிகள் இல்லம், போன்றவற்றில் பராமரிக்கப்படுவார்கள். அவ்வாறு கடந்த ஆண்டில் 554 பிள்ளைகளும் இளையர்களும் பரா மரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லங்களில் விடப்பட்டனர். ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை அந்த முந்திய ஆண்டில் 597 என்று அமைச்சு தெரிவித்தது.
பிள்ளைகளைத் தத்தெடுக்கும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர் 6354 8313 என்ற எண், 9645 8231 என்ற வாட்ஸ்அப் எண், fostering@msf.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இணையத் தளத்தில் பிள்ளைத் தத்தெடுப்பு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் முரசுடன் தந்தையர் தினம்
என் அப்பாதான் உலகிலேயே சிறந்த அப்பா என்பதை
ஒரு சிறு கவிதையாக எழுதுங்கள். 100 சொற்களுக்குள் ஒரு கட்டுரையில் சொல்லுங்கள். டிக்டாக் காணொளியாக படையுங்கள். இப்படி இசை, ஓவியம், நடனம் ஏதாவது ஒரு படைப்பாக தமிழ் முரசுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!
படைப்பை உங்கள் ஃபேஸ்புக், இஸ்டகிராம் அல்லது டிக்டாக்கில் பதிவேற்றம் செய்து தமிழ் முரசை 'டேக்' செய்யுங்கள். அதோடு, #TMFathersDay என்பதை உங்கள் பதிவில் குறிப்பிடுங்கள். தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகள் தமிழ் முரசில் இடம்பெறும்.
பாலியல் பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை
பெண் இஸ்லாமிய சமய ஆசிரியர்கள் பற்றிய சர்ச்சைக்குரிய இணைய வாக்களிப்பு விவகாரம் வெளியாகி இரு வாரங் களுக்கு நிறைவடைவதற்கு முன், அவ்வாறு பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப் படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க சுமார் 20 வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர்.
'டிஃபென்ஸ் கில்டு எஸ்ஜி' என்று அழைக்கப்படும் இத்திட்டத்தை சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மெண்டாக்கி, முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், மக்கள் கழக மலாய் நற்பணிச் செயற்குழுக்கள் மன்றம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை அமைத்துள்ளன.
பெண் இஸ்லாமிய சமய ஆசிரியர்கள் பற்றிய சர்ச்சைக் குரிய இணைய வாக்களிப்பு விவகாரம் பற்றி அறிந்தவுடன், சட்டத் துறையில் உள்ள தமது சக நண்பர்களை அணுகி, அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவைப்படும் சட்ட ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
இத்திட்டம் குறித்து நேற்று முன்தினம் தமது ஃபேஸ் புக்கில் கருத்துரைத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச் சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, "இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட பயனுள்ள திட்டம்," என்றார்.

