அடுத்த 'டிமென்ஷியா' நட்பார்ந்த நகரம் இயோ சூ காங்

அடுத்த 'டிமென்ஷியா' நட்பார்ந்த நகரம் இயோ சூ காங்

1 mins read
d67821d0-85c2-4b59-b0f9-41b71ec4cce8
அங் மோ கியோ அவென்யூ நான்கில் உள்ள புளோக் 624 தரைத்தளத்தின் சுவர்களில் ஆரோக்கிய மான வாழ்க்கைமுறையைச் சித்திரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

இயோ சூ காங் நகரம் 'டிமென்ஷியா' எனப்படும் மூத்தோர் ஞாபக மறதி நோயாளிகளுக்கான அடுத்த நட்பார்ந்த நகரமாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.

ஞாபக மறதி நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வரும்போது, மீண்டும் சரியாக அவர்களின் வீட்டுக்குத் திரும்புவதற்கு உதவும் வகையில் புளோக்குகளிலும் இதர பல இடங்களிலும் வண்ணமயமான சுவரோவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள புளோக்குகளின் எண்களும் முதியோர் நன்கு பார்த்துப் புரிந்துகொள்ளும் வகையில் பெரிதாக்கப்பட்டுள்ளன.

புளோக்குகளில் சுவரோவியங்கள் வரைதல் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கி, அடுத்த மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்தத் திட்டத்துக்கு மூத்தோருக்கான ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு உட்பட பல அமைப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.