பல சேவைகளை உள்ளடக்கிய ஒரு செயலியை கம்ஃபர்ட் டெல்குரோ வெளியிடும்

1 mins read
8d36cb0c-649c-46a4-a06a-b57a365cbd19
தற்போது கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்தின் ஸிக் (Zig) செயலியில் உள்ள பல சேவைகளும் புதிய செயலியிலும் கிடைக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் வெளியிடவிருக்கும் புதிய செயலியில் டாக்சி, தனியார் பேருந்து, கார் வாடகை எடுத்தல் மற்றும் வாடகைக்கு விடுதல் போன்ற பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்தின் ஸிக் (Zig) செயலியில் உள்ள பல சேவைகளில் ஒன்றான உணவகப் பதிவுகளையும் இந்தப் புதிய செயலியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புதிய செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிங்கப்பூரில் உள்ள பலதரப்பட்ட சேவைகளை எளிதில் பெற்றுக்கொள்வார்கள். வாகனமோட்டக் கற்றுக்கொள்ளும் சேவைகள், மருத்துவப் போக்குவரத்து ஆகியவையும் புதிய செயலியில் இணைக்கப்படும்," என்று கம்ஃபர்ட் டெல்குரோ நேற்று தெரிவித்தது.

எங்கள் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுகளை மறுஒருங்கிணைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் புதிய செயலியின் உருவாக்கம் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட கம்ஃபர்ட் டெல்குரோ, எங்கள் டாக்சி, பேருந்து, வாடகை கார் சேவை, ஸிக் பிரிவுகள் அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'பிரைவேட் மொபிலிட்டி' (பிஎம்ஜி)குழுமத்தின் கீழ் வரும் என்று விவரித்தது.

பிஎம்ஜி பிரிவில் மொத்தம் 12,000க்கு மேற்பட்ட வாகனங்கள் இருக்கும். அந்தப் பிரிவுக்கு கம்ஃபர்ட் டெல்குரோ குழுமத்தின் தலைமை நீடித்த நிலைத்தன்மை அதிகாரி திரு ஜேக்சன் சியா தலைமை வகிப்பார். தற்போதைய பொறுப்புடன் புதிய அதிகாரியைத் தேர்வு செய்யும் வரை அவர் இரு பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார் என்றும் கம்ஃபர்ட் டெல்குரோ கூறியது.