சிங்கப்பூர் - சீனா: தற்காப்பு உறவு, ஒத்துழைப்பு மறுஉறுதி

தங்கள் நாடு­க­ளுக்கு இடையே நீண்ட­கா­ல­மா­க­வும் நட்­பார்ந்­தும் நீடித்து வரும் தற்­காப்பு உற­வு­களை சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென்­னும் சீனத் தற்­காப்பு அமைச்­சர் வெய் ஃபெங்கே­வும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­ உள்­ள­னர்.

அமைச்­சர்­கள் இரு­வ­ரும் நேற்று காணொளி வழி­யா­கக் கலந்­து­ரை­யா­டி­ய­போது, சிங்­கப்­பூர் -சீனா இடையே அர­ச­தந்­திர உறவு மல­ரத் தொடங்கி கடந்த ஆண்­டு­டன் 30 ஆண்­டு­களானதை நினை­வு­கூர்ந்­த­னர். அதை­யொட்டி, சீன ஆகா­யப் படை­யின் 'பா யி' வான்­சா­க­சக் குழு­வி­னர் முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூர் ஆகா­யக் காட்­சி­யில் பங்­கேற்­ற­னர்.

கொவிட்-19 பர­வல் சூழ­லி­லும் இரு நாடு­களும் தொடர்ந்து கலந்­து­ற­வாடி வந்­த­தா­கத் தற்­காப்பு அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரி­வித்­துள்­ளது. இரு­த­ரப்பு, பல­த­ரப்­புப் பயிற்­சி­கள், உயர்­மட்ட நிலை­யி­லான வரு­கை­கள், நிபு­ணத்­து­வப் பரி­மாற்­றங்­கள் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

வட்­டா­ரப் பாது­காப்பு மேம்­பாடு­கள், கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போரில் தத்­தமது நாடு­களின் ராணு­வத்­தி­னர் எத்­த­கைய ஆத­ரவை வழங்­கி­னர் என்­பது பற்­றி­யும் இரு நாடு­க­ளின் தற்­காப்பு அமைச்­சர்­களும் பேசி­னர்.

ஆசி­யான் - சீனா தற்­காப்பு ஒத்­து­ழைப்­பை­யும் ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் கூட்­டம் - பிற நாடு­கள் (ஏடி­எம்­எம்-பிளஸ்) கட்­ட­மைப்­பை­யும் வலுப்­ப­டுத்­தும் வழி­கள் குறித்­தும் அவர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் செய்துகொண்ட மேம்படுத்தப்பட்ட உடன்பாட்டின்கீழ், தற்காப்பு உறவை வலுப்படுத்தக் கொண்டு உள்ள கடப்பாட்டையும் அவர்கள் மறுஉறுதி செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!