தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குதிரைப் பந்தய சூதாட்டம்: 158 பேரிடம் விசாரணை

1 mins read
130e44c7-8225-48c5-a4ce-e25766a5e481
அதிரடி சோதனை யில் கைப் பற்றப்பட்ட ரொக்கம், பொருட்க ளும் பிடிபட்ட வர்களும். படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் -

சட்­ட­வி­ரோத குதி­ரைப் பந்­தய சூதாட்­டத்­தில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின் பேரில் 158 பேர் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர். 36க்கும் 83க்கும் இடைப்­பட்ட வய­து­டைய அவர்­கள், பாது­காப்பு இடை­வெளி நட­வ­டிக்­கை­களை மீறி­ய­தா­க­வும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

குற்­ற­வி­யல் புலனாய்வுப் பிரி­வும் போலி­சின் ஏழு தரைப் பிரி­வு­களும் ஏப்­ரல் 24 தேதிக்­கும் ஜூன் 6ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் சட்­ட­வி­ரோ­தக் குதி­ரைப் பந்­த­ய சூதாட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் மேற்கொண்டன.

தெலுக் பிளாங்கா கிர­செண்ட், புக்­கிட் மேரா வியூ, சிராங்­கூன் சென்ட்­ரல், பிடோக், புக்­கிட் பாத்­தோக், உட்­லண்ட்ஸ், மார்­சி­லிங், ஈசூன் உள்­ளிட்ட வட்­டா­ரங்­களில் நடைபெற்ற நாடா­ள­விய அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அதி­கா­ரி­களும் உத­வி­னர் என்று போலிஸ் நேற்று வெளி­யிட்ட அறிக்கையில் தெரி­வித்­தது.

சோத­னை­யில் $76,000க்கும் அதி­க­மான ரொக்­கம், கைபே­சி­கள், சூதாட்ட ஆவ­ணங்­கள் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­டன என்று போலிஸ் கூறி­யது.

இதன் தொடர்­பில் 147 ஆட­வர்­களும் 11 பெண்­களும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அனைத்து வகை­யான சட்­ட­விரோத சூதாட்ட நட­வ­டிக்­கை­களும் கடு­மை­யா­கக் கரு­தப்­படும் என்­றும் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படு­வோர் மீது தொடர்ந்து கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று போலிஸ் கூறி­யது.