உள்–நாட்–டுப் பாது–காப்பு சட்–டத்–தின்–கீழ் கைது

சிரியா ெசன்று ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­பில் சேரத் திட்­ட­மிட்ட 34 வயது இல்­லத்­த­ர­சி­யும் முன்­னாள் சமய போத­க­ரான அவ­ரது கண­வ­ரும் உள்­நாட்­டுப் பாது­காப்பு சட்­டத்­தின்­கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ருக்­காயா ராம்லி என்ற 34 வயது நிரம்­பிய இல்­லத்­த­ரசி அவ­ரது கண­வ­ரால் தீவி­ர­வாத சிந்­த­னைப் போக்கை மேற்­கொண்­டார். இதில் அவ­ரது கண­வ­ரும் இது­போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளாகி கைது செய்­யப்­பட்­டி­ருந்­ததாகக் கூறப்படுகிறது.

ருக்­கா­யா­வின் கண­வர் கைது செய்­யப்­பட்­ட­பின் ருக்காயாவிற்கு சமய அறி­வுரை போதனை இடம்­பெற்­றது. ஆனால், அவர் தாம் கொண்­டி­ருந்த தீவி­ர­வாத மனப்­போக்கைக் கைவிட மறுத்­தார்.

இவ­ரின் கண­வர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்­யப்­பட்ட பின்பு ருக்­கா­யா­விற்கு எதி­ராக கட்­டுப்­பாட்டு ஆணை பிறப்­பிக்­கப்­பட்டது.

பின்­னர் ருக்­காயா இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் கைது செய்­யப்­பட்­டார்.

"எனினும், அவ­ருக்கு எதி­ராக கட்­டுப்­பாடு ஆணை பிறப்­பிக்­கப்­பட்ட பின் அவ­ரது தீவி­ர­வாத நடத்தை மோச­ம­டைந்­தது. அத்­து­டன், சிங்­கப்­பூ­ரின் பாது­காப்புக்குப் பங்­கம் விளை­விக்­கும் நட­வ­டிக்­கை­களும் அதி­க­ரித்­தன.

"ருக்­கா­யாவை சீர்­ப­டுத்த அவ­ருக்கு அளிக்­கப்­பட்ட பயிற்சி வகுப்­பு­ளில் பங்­கேற்க அவர் முயற்சி செய்­யா­மல் அவர் தனது தீவி­ர­வாத நம்­பிக்­கை­க­ளி­லேயே வேரூன்றி இருக்­கி­றார்.

"அத்­து­டன், அவர் ஐஎஸ் அமைப்­பின் வன்­முறைச் செயல்­

க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­து­டன் இஸ்­லாம் சம­யத்­துக்கு எதி­ரி­கள் என அவர் நினைப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­யைப் பயன்­ப­டுத்­து­வது ஏற்­பு­டைய செயல் எனக் கரு­து­கி­றார்," என்று உள்­நாட்­டுப் பாது­காப்புப் பிரிவு கூறி­யுள்­ளது.

ருக்­கா­யா­விற்கு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பாட்டு ஆணை­யின்­படி, அவர் தனது வசிப்­பி­டத்­தையோ வேலை­யி­டத்­தையோ மாற்­றக்­

கூ­டாது. மேலும், அவர் முன் அனு­

ம­தி­யின்றி வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­ளக்­கூ­டாது.

அத்­து­டன், அனு­ம­தி­யின்றி அவர் பொது­வில் அறிக்­கை­கள் விடு­வது அல்­லது அமைப்­பு­களில் சேரு­வது போன்ற செயல்­களில் ஈடு­ப­டக்­கூ­டாது.

இதற்கு மாறாக, ருக்­காயா தமது கண­வ­ரின் சகாக்­களும் ஐஎஸ் அமைப்­பின் ஆத­ர­வா­ளர்­க­ளு­மான நபர்­க­ளு­ட­னும் இணை­யம்­வழி தொடர்­பில் இருந்­தார்.

"அவர் தனது தீவி­ர­வாத வன்­மு­றைப் பாதை­யில் தொட­ரா­மல் இருக்க அவர் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்பட்டார்," என்று உள்­

நாட்­டுப் பாது­காப்புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

ருக்­கா­யா­வின் கண­வ­ரும் மலே­சி­யாவை சேர்ந்­த­வ­ரு­மான ஃபிர்துஸ் கமால் இந்த்­சாம் சிங்­கப்­பூ­ரில் துப்­பு­ர­வா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்­தார். இவர் பிப்­ர­வரி மாதம் கைது செய்­யப்­பட்டு மலே­சி­யா­விற்கு திருப்பி அனுப்­பப்­பட்­டார்.

அவர் 2016ஆம் ஆண்டு தீவி­ர­வாத போக்கை கொண்­டி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!