நகர மையம்- பொங்கோல் வட்டாரங்களில் குப்பை அகற்றும் பணியில் செம்ப்வேஸ்ட் நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும். அதற்கான ஒப்பந்தத்தைப் பெற செம்ப்வேஸ்ட் நிறுவனம் உட்பட ஆறு நிறுவனங்கள் போட்டியிட்டன. இருப்பினும், ஒப்பந்தத்தை செம்பேவேஸ்ட் நிறுவனம் தக்கவைத்துக்கொண்டது.
தேசிய சுற்றுப்புற வாரியம் வழங்கியுள்ள இந்தப் புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த திட்டங்களை செம்ப்வேஸ்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும்.
குப்பை அகற்றும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள புதிய லாரிகளில் 14 மின்சார லாரிகளும் அடங்கும். அதுமட்டுமல்லாது கேலாங் சிராய் சந்தையில்புதிய கழிவு நிர்வாக முறை ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படும்.

