நன்யாங் தொழில்நுட்பப் பல்
கலைக்கழகத்தைச் (என்டியு) சேர்ந்த விஞ்ஞானிகள் கூடுதல் பாதுகாப்பு தரும் முகக்கவசத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த வகை முகக்கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இந்த முகக்கவசம் கிருமி
களைக் கொண்ட திரவத் துளிகளை 45 வினாடிகளில் அழிக்கக்கூடியது என்றும் 99.9 விழுக்காடு கிருமிகளை வடிகட்டக்
கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்95 வகை முகக்கவசங்களைவிட இது கூடுதல் பாதுகாப்பைத் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டியு தயாரித்துள்ள இந்த முகக்கவசத்தின் மீது பூசப்பட்டுள்ள ரசாயனம் கிருமிகளை அழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

