பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணத்தை நீக்கும் 'ரெவொலுட்'

பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணத்தை நீக்கும் 'ரெவொலுட்'

1 mins read
15667602-dc0b-4ea8-a0c7-c41c3c1227fb
-

இந்­தி­யா­வுக்­கும் மலே­சி­யா­வுக்­கும் பணம் அனுப்­பும் சேவைக்­கான கட்­ட­ணம் தற்­கா­லி­க­மாக

நிறுத்­தி­வைக்­கப்­படும் என்று நிதித் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'ரெவொ­லுட்' அறி­வித்­துள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் உல­கெங்­கும் பலர் பாதிப்

படைந்­துள்­ள­தா­க­வும் சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் தங்­கள் குடும்ப உறுப்­பி­னர் அனுப்பி வைக்­கும் பணத்தை நம்பி வாழ்க்கையை நடத்­து­ப­வர்­க­ளுக்கு இந்­தக் கட்­டண நீக்­கம் பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றும் நிறு­வ­னம் கூறி­யது.

இந்­தி­யா­வுக்­குப் பணம் அனுப்­பும் சேவைக்­கான கட்­ட­ணத்தை ரெவொ­லுட் நிறு­வ­னம் கடந்த மாதம் 10ஆம் தேதி­யி­லி­ருந்து நிறுத்­தி­வைத்­துள்­ளது. கட்டண நீக்கம் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.