பிரதமர் லீ-ஆஸ்திரேலியப் பிரதமர் இன்று சந்திப்பு

பிரதமர் லீ-ஆஸ்திரேலியப் பிரதமர் இன்று சந்திப்பு

1 mins read
71f5163e-6c22-41b6-8691-bfc7a1360d30
-

ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் இன்று சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்டு பிர­த­மர் லீ சியன் லூங்­கைச் சந்­திக்­கி­றார்.

இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு தொடர்­பாக இரு­வ­ரும் கலந்­து­ரை­யாட இருப்­ப­தாக வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இரு­நாட்­டுத் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு இஸ்­தா­னா­வில் நடை­பெ­றும்.

சந்­திப்பை அடுத்து, இரு­வ­ரும் இணைந்து மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசு­வர் என்று அமைச்சு கூறி­யது.

பிர­த­மர் லீயும் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் மோரி­ச­னும் நேர­டி­யா­கச் சந்­தித்து ஓராண்­டுக்­கும் மேலா­கி­விட்­டது.

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இடை­யி­லான முழு­மை­யான உத்­தி­பூர்­வ பங்­கா­ளித்­து­வத்

திட்­டத்­தின்­கீழ் இரு­நாட்­டுப் பிர­த­மர்­களும் ஆண்­டுக்கு ஒரு­முறை நேர­டி­யா­கச் சந்­தித்­துக்­கொள்­வது வழக்­கம்.

ஆனால் கொவிட்-19

நெருக்­கடி­நிலை கார­ண­மாக

இந்­தச் சந்­திப்பு கடந்த ஆண்­டில் இணை­யம் வழி நடத்­தப்­பட்­டது.

கொரோனா சூழல் பற்­றி­யும் இரு­நாட்­டுத் தலை­வர்­கள் கலந்­து­ரை­யா­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. முக்­கி­ய­மான ஒப்­பந்­தங்­களும் கையெ­ழுத்­தி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.