சிங்கப்பூர் உட்பட 110 நாடு-க-ளுக்கு அனுமதி

சிங்கப்பூர் உட்பட 110 நாடு-க-ளுக்கு அனுமதி

2 mins read
395bff29-ef59-4e06-aa1e-7a6ece17eace
-

அமெ­ரிக்க நோய் பர­வல், தடுப்பு மையம் பரிந்­துரை

உல­கின் 110 நாடு­க­ளுக்கு எதி­ரான பய­ணக் கட்­டு­பா­டு­களைத் தளர்த்­தும்­படி அமெ­ரிக்­கா­வின் நோய் பர­வல், தடுப்பு மையம் பரிந்­துரை செய்­துள்­ளது.

இதில் சிங்­கப்­பூர் ஆக பாது­காப்­பான நாடு என பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், இவ்­வாண்­டின் தோக்­கியோ ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களை கருத்­தில் ெகாண்டு ஜப்­பான் தொடர்­பான பயண அறி­வு­றுத்­த­லை­யும் அது மறு­ப­ரி­சீ­லனை செய்ய உள்­ளது.

இதன்­படி, பய­ணம் செய்­யக்­ கூ­டாது என்ற 4ஆம் நிலை அறி­ வுறு­த்­த­லுக்கு இலக்­கா­கி­யி­ருந்த 61 நாடு­க­ளுக்கு எதி­ரான அறி­வு­றுத்­தல் தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

மேலும், 50 நாடு­க­ளுக்கு எதி­ரான நிலை இரண்­டாம் கட்­டம் அல்­லது முத­லாம் கட்­டத்­துக்கு தளர்த்­தப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ேநாய் பர­வல், தடுப்பு மைய பேச்­சா­ளர் செவ்­வாய்க்­கி­ழமை அறி­வித்­தார்.

எந்த நாட்­டுக்கு ஒரு­வர் பய­ணம் செய்ய உத்­தே­சித்­தா­லும் அவர் முத­லில் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதில் மூன்­றாம் நிலை­யி­லுள்ள நாடு­க­ளுக்கு, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள், அவ­சி­ய­மில்­லாத பய­ணம் மேற்­கொள்ள வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அது­போல், கடு­மை­யான நோய் பாதிப்­புக்கு உள்­ளா­கக்­கூ­டிய தடுப்­பூசியை போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் அவ­சி­ய­மில்­லாத பய­ணம் மேற்­ கொள்ள வேண்­டாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இறு­தி­யாக, மிக­வும் பாது­காப்­பாக உள்ள நாடு­கள் என பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள நாடு­க­ளுக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் செல்­ல­லாம் என்று அந்த மையம் தெரி­வித்­து உள்ளது.­

இதன்­படி, மிக­வும் குறை­வான அபா­யம் உள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர், இஸ்­ரேல், தென்­கொ­ரியா, ஐஸ்­லாந்து, பெலிஸ், அல்­பே­னியா போன்ற நாடு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

பட்­டி­ய­லின் மூன்­றாம் நிலை­யில் பிரான்ஸ், ஈக்­கு­வே­டோர், பிலிப்­பீன்ஸ், மலே­சியா, தென்­னாப்­பி­ரிக்கா, கனடா, மெக்­சிகோ, ரஷ்யா, ஸ்பெ­யின், சுவிட்­சர்­லாந்து, துருக்கி, உக்­ரேன், ஹோண்­டு­ராஸ், ஹங்­கேரி, இத்­தாலி போன்­றவை உள்­ளன.

தற்­பொ­ழுது தனது பயண அறி­வு­றுத்­தலை திருத்தி அமைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக அெமரிக்க வெளி­யு­றவு அமைச்சு பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார். இதன் தொடர்­பில் 90க்கும் அதி­க­மான நாடு­க­ளின் நோய் அபாய நிலையை செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யு­றவு அமைச்சு குறைத்­துள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

முன்­ன­தாக, கடந்த மே மாதம் 24ஆம் தேதி­யன்று, ஜப்­பா­னில் கொரோனா நோய்த் தொற்று பரவி வரு­வ­தைக் கார­ணம் காட்டி அெமரிக்க வெளி­யு­றவு அமைச்சு அந்­நாட்­டுக்கு பய­ணம் செய்­வதை தவிர்க்கு­மாறு தெரி­வித்­தி­ருந் ­தது.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சின் இந்­தப் பரிந்­துரை கவ­லை­­அளிப்­ப­தாக அமைந்­த­தால், பின்­னர் அமெ­ரிக்க அதி­பர் மாளிகை ேதாக்­கி­யோ­வில் நடக்­கும் ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளுக்­கும் அதில் பங்குபெறும் போட்­டி­யா­ளர்­க­ளுக்­கும் ஆத­ரவு தெரி­வித்து அறிக்கை வெளி­யிட்­டது.