மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் கெப்பல் நிறுவனம்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் கெப்பல் நிறுவனம்

2 mins read
e93ee3b6-0e91-4019-8e9f-fbafca420343
-

சமூக குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் 'காம்­லிங்க்' எனும் சமூ­கத் தொடர்பு முயற்­சி­யின் கீழ் குறைந்த வரு­மான குடும்­பத்­தைச் சேர்ந்த மாண­வர்­கள் புதிய மடிக்­க­ணி­னி­யைப் பெற­வி­ருக்­கின்­ற­னர்.

வீட்­டி­லி­ருந்து பள்­ளிப் பாடங்­களை படித்து வரும் மாண­வர்­ களுக்கு உத­வு­வ­தற்­காக மடிக் ­கணி­னி­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இதற்­காக கெப்­பல் நிறு­வ­னம் 150 மடி­க­ணி­னி­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.

அடுத்த மூன்று வார காலத்­தில் மடி­க்க­ணி­னி­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்று கெப்­பல் தெரி­வித்­தது. சமூ­கத் திட்­டத்­தின்கீழ் மாண­வர்­க­ளின் கல்வி, செறி­வூட்­டல் வகுப்­பு­க­ளுக்­கு எஞ்சிய கணினிகள் பயன்­ப­டுத்­தப்­படும்.

கெப்­பல் குழு­மத்­தின் தொண்­டூ­ழி­யர்­கள் மாண­வர்­க­ளுக்கு மின்­னி­லக்க கல்­வி­ய­றிவு பயி­ல­ரங்­கு ­க­ளை­யும் நடத்­த­வி­ருக்­கின்­ற­னர்.

மடி­க்க­ணி­னி­களை எப்­படி இயக்­கு­வது, அதற்கு தேவையான கணினி மென்­பொ­ருளை எப்­படி பயன்­ப­டுத்­து­வது போன்­றவை பயி­ல­ரங்­கில் கற்­றுத் தரப்­படும்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­துக்கு உதவ 2020ல் 4.2 மில்­லி­யன் பரா­ம­ரிப்பு திட்­டத்தை கெப்­பல் அறி­வித்­தது.

அதன் ஒரு பகு­தி­யாக மடி­க் கணி­னி­கள் நன்­கொ­டை­யாக வழங்­கப்­ப­டு­கின்­றன.

கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து அதற்கு எதி­ரான உலக முயற்­சி­க­ளுக்கு ஐந்து மில்­லி­யன் வெள்ளி வரை கெப்­பல் குழு­மம் உதவி வழங்­கி­யுள்­ளது.

கெப்பல் கேர் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹோ டோங் யென், கொள்ளைநோயால் மின்னிலக்கமயம், இணையம் வழி கற்றல் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இது, கிருமிப் பரவல் கட்டுப் படுத்தப்பட்ட பிறகும் தொடரும் என்றார் அவர்.

மின்னிலக்க சாதனங்கள், மின்னிலக்க கல்வியறிவை ஊக்கு விப்பதன் மூலம் குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் களின் கல்வித் தேவையை எங்க ளால் பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் காலகட்டத்தில் மாண வர்கள் வீட்டிலிருந்து படிப்பதற்கு உதவி யாக இருக்கும் என்று திரு ஹோ டோங் யென் சொன்னார்.

இதற்கிடையே ெகப்பலின் உதவிக்கு சமூக, குடும்ப மேம் பாட்டுக்கான நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மாணவர்களுக்கு உதவும் அதன் முயற்சிகள் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண் டார்.