சிங்கப்பூர் ராட்டினத்தை இயக்கும் நிறுவனமான ஸ்ட்ராகோ கார்ப்பரேஷனுக்கு $8.2 மில்லியன் இழப்பீடு வழங்குவதற்கு நடுவர் மன்றத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.
அந்த இழப்பீட்டை 2018 ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து இழப்பீடு வழங்கும் தேதி வரை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ட்ராகோ நிறுவனம் தெரிவித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டில் பழுது ஏற்பட்டதால் சிங்கப்பூர் ராட்டினம் பல மாதங்களாக செயல்படவில்லை.
இதையடுத்து பழுதுபார்ப்பு செலவுக்கும் நட்டம் ஏற்பட்டதற்கும் ஈடு செய்ய வேண்டும் என்று தனது காப்புறுதி நிறுவனத்துக்கு அது கோரிக்கை விடுத்தது.
ஆனால் சில விதிமுறைகளை சுட்டிக்காட்டி இழப்பீட்டைத் தர காப்புறுதி நிறுவனம் மறுத்தது.
இதையடுத்து இவ்வாண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் அனைத் துலக நடுவர் மன்றத்தில் தனது கோரிக்கையை ஸ்ட்ராகோ எடுத்துச் சென்றது.
இதில் ஸ்ட்ராகோ வெற்றி பெற்றுள்ளது.
காப்புறுதி நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

