சிங்கப்பூர் ராட்டினத்துக்கு $8.2 மி. இழப்பீடு

1 mins read
ea34fbe0-2b30-4b3b-aa02-de30ffa9f8b1
சிங்கப்பூர் ராட்டினத்தில் பழுது ஏற்பட்டதால் 2018ல் பல மாதங் களாக செயல்படவில்லை. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் ராட்­டி­னத்தை இயக்கும் நிறு­வ­ன­மான ஸ்ட்­ராகோ கார்ப்­ப­ரே­ஷ­னுக்கு $8.2 மில்­லி­யன் இழப்­பீடு வழங்குவதற்கு நடுவர் மன்­றத்­தில் தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

அந்த இழப்­பீட்டை 2018 ஏப்­ரல் 26ஆம் தேதி­யி­லி­ருந்து இழப்பீடு வழங்கும் தேதி வரை வட்­டி­யு­டன் வழங்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தைக்கு எழு­திய கடி­தத்­தில் ஸ்ட்­ராகோ நிறு­வ­னம் தெரி­வித்­தது.

கடந்த 2018ஆம் ஆண்­டில் பழுது ஏற்­பட்­ட­தால் சிங்­கப்­பூர் ராட்­டி­னம் பல மாதங்­க­ளாக செயல்­ப­ட­வில்லை.

இதை­ய­டுத்து பழு­து­பார்ப்பு செல­வுக்­கும் நட்­டம் ஏற்­பட்­ட­தற்­கும் ஈடு செய்ய வேண்­டும் என்று தனது காப்­பு­றுதி நிறு­வ­னத்­துக்கு அது கோரிக்கை விடுத்­தது.

ஆனால் சில விதிமுறைகளை சுட்டிக்காட்டி இழப்­பீட்டைத் தர காப்­பு­றுதி நிறு­வ­னம் மறுத்­தது.

இதையடுத்து இவ்வாண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் அனைத் துலக நடுவர் மன்றத்தில் தனது கோரிக்கையை ஸ்ட்ராகோ எடுத்துச் சென்றது.

இதில் ஸ்ட்ராகோ வெற்றி பெற்றுள்ளது.

காப்புறுதி நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.