மறதி நோயாளிகளுக்கு உதவும் மருந்து

மறதி நோயாளிகளுக்கு உதவும் மருந்து

1 mins read
e9968365-17fb-4c57-9cf8-3d7365f24ccf
-

நினைவாற்றல் இழப்பை தாமதப்படுத்தும் மருந்துக்கு அமெரிக்க ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அங்கீகாரம், சிங்கப்பூரில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பப்படுகிறது. தற்போதைய மருந்துகள் மறதிநோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 'aducanumab' எனும் அந்த மருந்தை அமெரிக்காவின் உயிர்தொழில்நுட்ப நிறுவனமான பயோஜென் தயாரித்து வருகிறது. சிங்கப்பூரில் இது கிடைக்கவில்லை. சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகரித்த பிறகே அம் மருந்தை இங்கு பயன்படுத்த முடியும். ஆனால் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் புதிய மருந்துக்கு அனுமதியளித்துள்ளதால் சிங்கப்பூரும் அதனை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சிங்கப்பூரில் சுமார் 86,000 பேர் நினை வாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.