கொரோனா கிருமியை கண்டுபிடிக்க துல்லியமான முறை

கொரோனா கிருமியை கண்டுபிடிக்க துல்லியமான முறை

1 mins read
0fd7393a-b4f4-451c-ab09-ae04a2a241d6
-
Google News Preferred Icon

கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் 'Sars-Cov-2' கொரோனா கிருமி உட்பட பல கிருமிகளை துல்லியமாக அடையாளம் கண்டுபிடிக்கும் புதிய முறையை சிங்கப்பூர்-எம்ஐடி அலையன்ஸ் ஃபார் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி அறிவியல் அறிஞர்கள் கூட்டாக உருவாக்கியுள்ளனர்.

Rapid Digital Crispr Approach (Radica) எனும் புதிய முறையில் மாதிரியிலிருந்து குறிப்பிட்ட கிருமியை அடையாளம் காண முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் விவரம் 2021 மே மாத Biomaterials சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்பு, நோய்த் தொற்றின் பாதிப்பை நிர்ணயிக்க பேருதவியாக இருக்கும் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.