பருவநிலைத் திட்டங்களுக்காக $2.38 பில்லியன் நிதி ஒதுக்கீடு

2 mins read
535ef1ca-b622-45ba-885e-7d9d3b28dd66
-

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் பரு­வ­நிலை தொடர்­பான திட்­டங்­களில் முத­லீடு செய்வதற்காக 1.8 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (2.38 பில்­லி­யன் வெள்ளி) ஐந்து முத­லீட்டு நிர்­வாக அமைப்புகளி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளது.

அத­னைக் கொண்டு அந்­நிர்­வா­கி­கள் ஆசிய ஃபசி­பிக் வட்­டா­ரத்­துக்­கான நீடித்த நிலைத்­தன்மை மையங்­களை இங்கு அமைப்­ப­து­டன் இங்­குள்ள நிறு­வ­னங்­கள் தங்­கள் பசுமை செயல்­பா­டு­களை மேம்­ப­டுத்த அவை வழி­காட்­டுவார்கள்.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட முதல் நீடித்த நிலைத்­தன்மை அறிக்­கை­யில் இதனைத் தெரி­வித்­தி­ருந்­தார் ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு ரவி மேனன்.

மேலும், நிறு­வ­னங்­கள் அதன் நீடித்த நிலைத்­தன்மை செயல்­பாடு களைக் கட்­டா­யம் வெளி­யி­ட­வேண்­டும் எனும் விதி­மு­றை­யைப் பற்றி சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நிதித் துறை­யி­ன­ரி­டம் இவ்­வாண்டு கருத்­துக் கேட்­கும். குறிப்­பாக அந்த விதி­மு­றை­களை உல­கத் தரத்­துக்கு ஏற்ற சட்­ட­வி­தி­மு­றை­க­ளாக மாற்­று­வது பற்றி கலந்து ஆலோ­சிக்­கப்­படும்.

கரி­யமிலத்­தைக் குறை­வாக வெளி­யேற்­றும் பொரு­ளி­ய­லாக சிங்­கப்­பூர் ஒழுங்­கு­மு­றை­டன் மாறு­ வதற்கு உத­வும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் திட்­டங்­களில் அவை அடங்­கும்.

ஒப்படைக்கப்பட்ட தொகை­யைக் கொண்டு ஐந்து சொத்து நிர்­வா­கி­களும் இந்த வட்­டா­ரத்­தில் நீடித்த நிலைத்­தன்மை தொடர்­பான முயற்­சி­களை முன்­னெ­டுப்­பர்.

சுற்­றுச்­சூ­ழல், சமூ­கம், ஆட்­சி­முறை சார்ந்த நிதி­களை அவை தொடங்­கு­வ­து­டன், பயிற்­சித் திட்­டங்­க­ளின் வழி பரு­வ­நி­லைக்கு ஏது­வான நிதித் துறை­யில் ஆற்­றல்­க­ளை­யும் அவர்கள் உயர்த்­துவர்.

மேலும், பரு­வ­நி­லைக்கு ஏது­வான நிதித்­து­றை­யில் இந்த வட்­டா­ரத்­துக்கு ஏற்ற ஆழ­மான ஆய்வு களைச் மேற்கொள்வதுடன் பரு­வ­நிலைக்கு ஏது­வான துறை­களில் நிதித் தொழில்­நுட்­பங்­க­ள் குறித்தும் ஆரா­யப்படும்.

சொத்து நிர்­வா­கி­கள், தனி­ந­பர்­கள் அல்­லது நிறு­வ­னங்­க­ளின் சொத்­து­களை நிர்­வ­கிப்­பவர்கள்.

ஐந்து சொத்து நிர்­வா­கி­களும் அடுத்த சில மாதங்­களில் இங்கு தங்கள் ஆசிய ஃபசி­பிக் வட்­டார மையங்­களை அமைத்­து­வி­டுவர் என்று எதிர்­பார்ப்­ப­தாக திரு மேனன் கூறி­னார்.

அத்­து­டன், பரு­வ­நிலை தொடர்­பான விவ­ரங்­களை வெளி­யிடு வதற்­கான ஒரே, சீரான தரம் இல்­லா­த­தால் நிறு­வ­னங்­கள் வெவ்­வேறு கட்­ட­மைப்­பு­க­ளைப் பின்­பற்றி விவ­ரங்­களை வெளி­யி­டு­கின்­றன.

அத­னால் உலக அள­வில் நீடித்த நிலைத்­தன்­மைக்­கான நிதி­யின் வளர்ச்சி தடை­பட்­டி­ருப்­ப­தாக திரு மேனன் தெரி­வித்­தார்.

நிறு­வ­னங்­கள் பரு­வ­நிலை தொடர்­பான விவ­ரங்­களை வெளி­யி­டும் முறை­யின் தரத்­தையும் ஒழுங்குமுறையையும் மேம்­ப­டுத்த அவ­ச­ரத் தேவை இருப்­ப­தாகச் சொன்னார் திரு ரவி மேனன்.