ஆடையின்றி ஆடிய வீடற்ற மாதுக்கு சிறைத்தண்டனை

கேலாங் லோரோங் 20ல் உள்ள பின்­சந்­தில் மார்ச் 18ம் தேதி ஆடை­யின்றி ஆடிக்­கொண்டே குப்பை, பீர் டின்­கள் உள்­ளிட்ட பொருட்­களை எரித்த மாதுக்கு நான்கு மாதங்­கள், ஆறு வார­ம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டது.

பொது­வெ­ளி­யில் ஆடை­யின்றி இருந்­த­து, தீங்கு ஏற்படும் அச்சத்தை உண்டாக்கும் என்று தெரிந்தும் பொருட்­களை வைத்­தது உட்பட மூன்று குற்­றச்­சாட்­டு­களை 33 வயது நொரா­ஸீடா முக­மது ஸயின் நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

அச்சத்தை ஏற்­படுத்­தும் என்று தெரிந்தே பொதுவிடத்தில் பொருட்­களை வைத்­ததற்காக தண்டனைபெற்ற முதல் நபர் அவர் ஆவார்.

முன்­ன­தாக, பிப்­ர­வரி 18 அன்று பொய்­சொல்லி போலிஸ் கண்டோன்­மண்ட் கட்­ட­டத்­துக்குள் நுழைந்த நொரா­ஸீடா, புளுடூத் ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களையும் சிவப்பு உறையில் மஞ்சள் தாயத்து, சில தாட்கள் உள்ளிட்டவற்றையும் வெள்ளைப் பெட்டியில் வைத்துவிட்டு சென்றார்.

மாலை சுமார் 4 மணிக்கு போலிசார் அவற்றைக் கண்டு பிடித்தனர். நொரா­ஸீடா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, பொருட்களை அங்கு வைத்ததற்கு அவர் சரியான விளக்கம் கூறவில்லை.

நொரா­ஸீடா 2005லிருந்து பற்பல குற்றங்களுக்காக தண்டனைபெற்றதைச் சுட்டிக்காட்டிய அரசாங்க வழக்கறிஞர் அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கும்படி நீதிபதியைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அண்மைய சம்பவங்கள் நடந்தபோது வீடில்லாமல் இருந்த நொராஸீடா, தமக்கு ஆறு பிள்ளைகள் இருப்பதாகக் கூறி மாறுவதற்கு வாய்ப்பை நீதிமன்றத்தில் கோரினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!