எஸ்எம்ஆர்டி ஊழியர் பணியிடத்தில் மரணம்

எஸ்எம்ஆர்டி ஊழியர் பணியிடத்தில் மரணம்

1 mins read
c3d17c41-3c17-4357-814c-badbda8ecf71
-

சிற்றுந்து ஒன்­றைப் பழு­து­பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது அதனை உயர்த்தி வைக்­கும் கார் ஜாக்கி கீழே விழுந்­து ஏற்­பட்ட விபத்­தில் எஸ்­எம்­ஆர்டி ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இன்­னொ­ரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்­டது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை விபத்து நேர்ந்­தது.

அங் மோ கியோ ஸ்தி­ரீட் 62ல் அதா­வது எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் அங் மோ கியோ கிடங்­கின் முக­வ­ரி­யி­லி­ருந்து உதவி கேட்டு ஜூன் 6ம் தேதி காலை 9.40 மணிக்­குத் தங்­க­ளுக்கு அழைப்பு வந்­த­தாக போலிசார் தெரி­வித்­த­னர்.

நினை­வி­ழந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்லப் ­பட்ட 43 வயது ஆட­வர் பின்­னர் காயங்­கள் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­தாக எஸ்­எம்­ஆர்டி பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

அத்­து­டன், நினைவு தப்­பா­மல் இருந்த 44 வயது ஆட­வர் ஒரு­வரும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு ­செல்­லப்­பட்­டார்.

தொழில்­நுட்­பர்­கள் இரு­வ­ரும் கூ டெக் புவாட் மருத்­து­வ­ மனைக்குச் செல்­லப்­பட்­ட­னர் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. ஒரு­வ­ருக்கு தலை­யில் பலத்த காயம். மற்­ற­வ­ருக்கு நெஞ்சு வலி ஏற்­பட்­டி­ருந்­தது.

காய­முற்ற ஊழி­யர் சிகிச்சை முடிந்து வீடு திரும்­பி­யுள்­ளார். அவர் மருத்­துவ விடுப்­பில் இருக்கிறார்.

உயி­ரி­ழந்த ஊழி­ய­ரின் குடும்­பத்­துக்கு எஸ்­எம்­ஆர்டி உத­வி­யும் ஆத­ர­வும் வழங்கி வரு­வ­தாக நிறு­வ­னத்­தின் வாக­னச் சேவைத் துறை­யின் பொது நிர்­வாகி திரு பிவி வெங்கடேசன் தெரி­வித்­தார். அங் மோ கியோ கிடங்­கில் உள்ள வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான பழுது ­பார்ப்புப் பிரி­வுக்கு வேலை நிறுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளதாகவும் அவர் கூறினார்.