பூனை துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஆடவர் மீது குற்றச்சாட்டு

பூனை துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
78ab5fe5-390e-435a-801f-095be5abd586
ஏப்ரல் மாதம் முதல் உடலில் ஆழமானக் காயங்களுடன் சுமார் பத்து பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. படங்கள்: நிங் வோங்/ஃபேஸ்புக் -

அங் மோ கியோ வட்­டா­ரத்­தில் தொடர்ச்­சி­யாக பூனை­கள் துன்பு­றுத்­தப்­பட்ட சம்­ப­வத்­தில் 37 வயது ஆட­வர் ஒரு­வர் மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது. விலங்­கு­க­ளைக் கொடுமை செய்த ஒரு குற்­றச்­சாட்டு லியோ வெய் லியாங் எனப்­படும் அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அங் மோ கியோ ஸ்தி­ரீட் 32ல் உள்ள புளோக் 352ஏ கார்­நி­றுத்த படிக்­கட்­டில் பேனா கத்­தி­யால் பூனை ஒன்றை அவர் மே 2ஆம் தேதி வெட்­டி­ய­தாக குற்­றச்­சாட்­டில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. அன்­றைய தினம் முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. காவல்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள அவர் மீது, இணை­யம் வழி­யாக நீதி­மன்ற விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

அப்­போது கேமரா முன் தோன்ற அவர் மறுத்­து­விட்­டார். அங் மோ கியோ வட்­டா­ரத்­தில் தொடர் சம்­ப­வ­மாக பூனை­கள் வெட்­டப்­பட்ட சம்­ப­வத்­தின் பின்­ன­ணி­யில் லியோ இருக்­க­லாம் என அர­சுத் தரப்­பில் நம்­பப்­பட்­டது. மேலும் அவரை மன­ந­லக் கழ­கத்­தில் இரு வாரங்­கள் விசா­ர­ணைக் காவ­லில் வைக்க அனு­மதி கோரப்­பட்­டது.

அதற்கு நீதி­பதி ஒப்­பு­தல் வழங்­கி­னார். விலங்கு மற்­றும் கால்­நடை மருத்­து­வச் சேவை அதி­கா­ரி­கள் போலி­சா­ரின் துணை­யு­டன் நேற்று முன்­தி­னம் லியோவைக் கைது செய்­த­னர். கடந்த ஏப்­ரல் மாதம் பிற்­ப­கு­தி­யில் இருந்து அந்த வட்­டா­ரத்­தில் குறைந்­த­பட்­சம் பத்து பூனை­கள் தங்­க­ளது உட­லில் ஆழ­மான வெட்­டு­க­ளு­டன் காணப்­பட்­டன. அங் மோ கியோ அவென்யூ 8க்கும் அவென்யூ 1க்கும் இடைப்­பட்ட இடங்­களில் சம்­ப­வம் நிகழ்ந்­தன.