அண்டைவீட்டாரின் வழிபாட்டிற்கு இடையூறு விளைவித்த மாதை விசாரித்துவரும் போலிஸ்

அண்டைவீட்டார் ஒருவரின் வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக மாது ஒருவர் வேண்டுமென்றே மணியடித்த சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விக்குப் பதிலளித்த போலிஸ், தன்னிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் 48 வயது மாது ஒருவர் போலிஸ் விசாரணைக்கு உதவி வருவதாகவும் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்றை திரு லிவனேஷ் ராமு என்பவர் நேற்று மாலை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.

தமது வீட்டிற்கு வெளியே மணியடித்து அவர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வந்த மாது ஒருவர், தரையிலிருந்த கம்பு ஒன்றை எடுத்து 15 வினாடிகளுக்கு வேகமாக மணியடித்தார்.

தமக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த மாதின் செயலை திரு லிவனேஷ் கண்டுகொள்ளாமல் இருந்தார். திரு லிவனேஷ் குனிந்தவுடன் அவர் வழிபாட்டின்போது ஒலித்த மணியோசை குறைந்தது. அதன் பின்னரும் அந்த மாது தொடர்ந்து சில முறை மணியடித்துவிட்டு தமது வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

இதுகுறித்து திரு லிவனேஷ் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறுகையில், “வழிபாடுகளில் ஈடுபடும் பலரைப்போல எங்களது குடும்பத்தில் வாரத்திற்கு இருமுறை, ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் வழிபாடு இது.

“இந்த வீட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நாங்கள் இதுபோன்ற விவகாரங்களைச் சந்தித்ததில்லை. கொவிட்-19 சூழலில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்,” என்றார்.

தாமும் தமது குடும்பத்தாரும் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக திரு லிவனேஷ் தெரிவித்தார்.

“அதிகாரிகள் இதுகுறித்த விசாரணை முடிவுகளை வெளியிட நாங்கள் காத்திருக்கும் வேளையில், எனது அண்டைவீட்டாரின் செயல்கள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

“இந்நிலையில், சகிப்புத்தன்மையின்மைக்கு எதிராக சக சிங்கப்பூரர்கள் ஒருமைப்பாட்டுடன் இருப்பது மனநிறைவு தருகிறது,” என்றார் திரு லிவனேஷ்.

இன்று இரவு 7.10 மணி நிலவரப்படி, இந்தக் காணொளிக்கு 4,700க்கும் அதிகமானோர் கருத்து கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!