தொற்று அபாயம் மிகுந்த வேலை இடங்களில் கட்டாய பரிசோதனை

முகக்­க­வ­சம் அணி­யாத வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் அதிக அபா­யம் உள்ள சூழல்­களில் வேலை செய்­வோர் அவ்­வப்­போது கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். அடுத்த மூன்று மாதங்­களுக்கு, இந்­தப் பரி­சோ­த­னை­களுக்­கான செல­வு­களை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொள்­ளும்.

வாடிக்­கை­யா­ளர்­கள் அமர்ந்து உண்­ணும் வசதி கொண்ட உணவு, பான நிலை­யங்­கள், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள், உடற்­த­குதி நிலை­யங்­கள் ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

இம்­மா­தம் 21ஆம் தேதி­யில் இருந்து அதி­க­பட்­சம் ஐவர், குழு­வாக அமர்ந்து உண்ண அனு­மதிக்­கப்­ப­டு­வர் என்­ப­தால் ஜூலை மாதம் முதல் உணவு, பான நிலை­யங்­களில் பணி­பு­ரி­வோர்க்குக் கட்டாய 'விரைவான, எளிதான பரி­சோ­தனை (எஃப்இடி)' நடை­முறை தொடங்­கும்.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது இந்த விரி­வு­ப­டுத்­தப்­பட்ட பரி­சோ­தனை நடை­முறை குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

ஆன்­டி­ஜன் விரை­வுச் சோதனை போன்ற 'எஃப்இடி' பரி­சோ­த­னை­களைப் பணி­யி­டத்­தி­லேயே செய்து­கொள்ள முடி­யும்; கிட்­டத்­தட்ட 30 நிமி­டங்­களில் முடி­வும் தெரிந்­து­விடும். தடுப்­பூசி போட்­டி­ருப்பினும் போட்டிரா­வி­டி­னும் ஊழி­யர்­கள் அனை­வ­ரும் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

வரும் மாதங்­களில் 'எஃப்இடி' நடை­முறை விரைந்து அதி­கப்­ப­டுத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. பெரிய நிறு­வ­னங்­கள், அதன்­பின் சிறிய நிறு­வ­னங்­கள் என அந்­தப் பரி­சோ­தனை நடை­முறை படிப்­ப­டி­யா­கக் கட்­டா­ய­மாக்­கப்­படும்.

எத்­தனை நாள்­க­ளுக்கு ஒரு­முறை செய்­யப்­பட வேண்­டும், சுய­மாகச் செய்­து­கொள்­ள­லாமா என்­பன போன்ற இப்புதிய பரி­சோதனை நடை­முறை குறித்த விவ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­படும் என்று நிதி அமைச்­ச­ரும் அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கட்­டுப்­பா­டு­கள் கவ­ன­மா­க­வும் படிப்­ப­டி­யா­க­வும் தளர்த்­தப்­பட்டு வரும் வேளை­யில், கொரோனா பர­வ­லை­யும் பெரிய அள­வி­லான கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வா­கும் அபா­யத்­தை­யும் குறைக்க அர­சாங்­கம் எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக இந்­தப் புதிய பரி­சோ­தனை நடை­முறை இடம்­பெ­று­வ­தாக அமைச்­சர் வோங் கூறி­னார்.

அடுத்த மூன்று மாத காலத்­திற்கு, இந்­தப் பரி­சோ­த­னைக்கு ஆகும் செல­வு­களை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்­ளும் எனக் குறிப்­பிட்ட அவர், "அவ்­வப்­போது அனை­வ­ரும் பரி­சோ­தனை செய்­து­கொள்­வது முக்­கி­யம் என்­ப­தால் அர­சாங்­கம் இதைச் செய்­கிறது. அதன்­பின், தங்­க­ளது தொடர்ச்­சி­யான திட்­ட­மி­டல்­க­ளின் ஒரு பகு­தி­யாக பரி­சோ­தனை நடை­மு­றை­க­ளை­யும் ஒருங்­கி­ணைப்­பது தொடர்­பில் முத­லா­ளி­கள் சிந்­திக்­கத் தொடங்க வேண்­டும்," என்று கேட்­டுக்­கொண்­டார்.

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­கள், கட்­டு­மா­னத் தளங்­கள், கப்­பல் பட்­ட­றை­கள், விமான நிலை­யம், துறை­மு­கங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், தாதிமை இல்­லங்­கள் உள்­ளிட்ட, கிருமி தொற்­றும் அபா­யம் அதி­க­முள்ள இடங்­களில் அட்­ட­வணைப்­படி அவ்­வப்­போது பரி­சோதனை செய்­து­கொள்­ளும் நடை­முறை ஏற்­கெ­னவே நடப்­பில் இருந்து வரு­கிறது.

தங்­க­ளது அபாய நிலை­யைப் பொறுத்து, தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் இல்­லா­வி­டி­னும், அவ்­வி­டங்­களில் பணி­யாற்­று­வோர் ஏழு அல்­லது பதி­னான்கு நாள்­க­ளுக்கு ஒரு­முறை கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!