உடற்பயிற்சிக்கூடங்களில் 21ஆம் தேதி முதல் உள்ளரங்கு செயல்பாடுகளுக்கு அனுமதி

வரும் வாரங்­களில் கொவிட்-19 பர­வல் கட்­டுக்­குள் இருக்­கும் பட்­சத்­தில், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­களும் உடற்­த­குதி நிலை­யங்­களும் முகக்­க­வ­ச­மின்றி உள்­ள­ரங்கு நட­வ­டிக்­கை­களை இம்­மா­தம் 21ஆம் தேதி­யில் இருந்து மீண்­டும் தொடங்­க­லாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே வேளை­யில், தனி­ம­னி­தர்­க­ளுக்கு இடையே குறைந்­தது இரண்டு மீட்­டர் இடை­வெளி அல்­லது ஐவர் வரை­யி­லான குழு­வினர்க்கு இடையே குறைந்­தது மூன்று மீட்­டர் இடை­வெளி போன்ற பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­கள் அங்கு நடை­மு­றை­யில் இருக்க வேண்­டும்.

ஐவர் அடங்­கிய பல குழுக்­கள் இடம்­பெ­றும் உட்­புற, வெளிப்­புற விளை­யாட்டு நட­வ­டிக்­கை­க­ளை­யும் அவை மேற்­கொள்­ள­லாம். ஆயி­னும், அந்­ந­ட­வ­டிக்­கை­களில் பயிற்­று­விப்­பா­ளர் உட்­பட அதி­க­பட்­சம் 30 பேர்­தான் பங்­கேற்க வேண்­டும்.

கடு­மை­யான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டால் பங்­கேற்­பா­ளர்­கள் முகக்­க­வ­சத்தை அகற்­றி­வி­ட­லாம். ஆயி­னும், சாத்­தி­ய­மி­ருந்­தால் அவர்­கள் முகக்­க­வ­சம் அணிந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­படுமாறு ஊக்கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­க­ளி­லும் உடற்­த­குதி நிலை­யங்­க­ளி­லும் உள்­ள­ரங்கு நட­வ­டிக்­கை­கள் தொடங்­கும்­போது, அவற்­றின் பணி­யா­ளர்­கள் அவ்­வப்­போது கொவிட்-19 பரி­சோ­தனை செய்து­கொள்ள வேண்­டும்.

நிகழ்ச்­சிக்குமுன் பரி­சோ­தனை நடவடிக்கை இடம்­பெற்­றால், 250 பேர்­வரை பங்­கேற்­கும் பெரிய அள­வி­லான விளை­யாட்டு நிகழ்ச்சி­களும் இம்­மா­தம் 21ஆம் தேதி முதல் அனு­மதிக்­கப்­ப­ட­லாம். நிகழ்ச்­சிக்­கு­முன் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளா­வி­டில், அதி­க­பட்­சம் 50 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

வரும் 14ஆம் தேதி திங்­கட்­கி­ழமை முதல், சிங்­கப்­பூர் பிரி­மியர் லீக் காற்­பந்து போன்ற விளை­யாட்டு நிகழ்ச்­சி­களை நேரில் கண்டுகளிக்கப் பார்­வை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!