சமூகத்தில் நால்வர் உட்பட புதிதாக 13 பேர்க்குக் கிருமித்தொற்று

சமூகத்தில் நால்வர் உட்பட புதிதாக 13 பேர்க்குக் கிருமித்தொற்று

2 mins read
c2fd2fbe-b04a-4ec7-8872-42ed8eb99b1b
-

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக 13 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளது. இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 62,236ஆக உயர்ந்­தது.

புதி­தாக கொரோனா தொற்­றிய 13 பேரில் நால்­வர் சமூ­கத்­தி­னர். அவர்­களில் இரு­வ­ரைத் தொடர்­பில்­லாத வகை­யில் கிருமி தொற்றி­ விட்டது.

தொடர்பினால் பாதிக்கப்பட்ட மற்ற இருவரில் ஒரு­வர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டவர்; இன்­னொ­ரு­வர்க்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்­கா­ணிப்­புப் பரி­சோ­த­னை­கள் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் புதி­தாக எவ­ரை­யும் கிருமி தொற்­ற­வில்லை.

எஞ்­சிய ஒன்­பது பேரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­கள் அனை­வர்க்­கும் இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது. அவர்­களில் எழு­வர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள் என்று சுகா­தார அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது.

முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் சமூ­கத்­தில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்ட இரு­வ­ரில் ஒரு­வர்க்கு எந்­தக் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­ட­னும் தொடர்­பில்லை என்­றும் அவர் சுங்கை காடுட்­டில் உள்ள கிராண்ட்­வொர்க் இன்­டீ­ரி­யர் நிறு­வனத்­தில் பழு­து­நீக்­கு­ப­வ­ராக வேலை செய்து வரு­கி­றார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மியன்­மா­ரைச் சேர்ந்த அவர், கடந்த மாதம் 31ஆம் தேதி முத­லா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்.

சமூ­கத்­தில் கிருமி தொற்­றிய இன்­னொ­ரு­வர் மலே­சி­யா­வைச் சேர்ந்த 21 வயது சமை­ய­லறை உதவி­யா­ளர். அவர் 308 ஆங்­கர்­வேல் சாலை­யில் செயல்­படும் 'ரைஸ் கார்­டன்' உண­வ­கத்­தில் பணி­பு­ரிந்து வரு­கி­றார். அவர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

ஆங்­கர்­வேல் சாலை­யில் உள்ள என்­டி­யுசி ஃபுட்ஃபேர் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் அவ­ருக்­குத் தொடர்­பி­ருந்­தது. அக்­கு­ழு­மத்­தில் இது­வரை 13 பேரை கொரோனா தொற்­றி­விட்­டது.

நேற்று முன்­தி­னம் பதி­வான நான்கு பாதிப்­பு­களில் எஞ்­சிய இரு­வ­ரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். ஒரு­வர் இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பிய சிங்­கப்­பூரர்; இன்­னொ­ரு­வர் ஈராக்­கில் இருந்து வந்த நிரந்­த­ர­வாசி.

நேற்று முன்­தின இரவு நில­வரப்­படி, தீவிர சிகிச்­சைப் பிரி­வில் ஒரு­வர் உட்­பட 158 பேர் கொரோனா தொற்­றுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். 291 பேர் சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­களில் தங்கி உடல்­ந­லம் தேறி வரு­கின்­றனர்.