இனப்பற்று இனவாதம் அல்ல; அதை திணித்தால் பிரச்சினை சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் விளக்கம்

இனப்பற்று இனவாதம் அல்ல; அதை திணித்தால் பிரச்சினை சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் விளக்கம்

2 mins read
3758a41a-5f80-49af-8e9a-02e828b576ea
-

மக்­க­ளி­டம் இனப் பற்று இருக்­க­லாம். அதுவே இன­வா­தம் ஆகி­விடாது. ஆனால் அந்தப் பற்றை பொது இடங்­க­ளுக்­குக் கொண்­டு­வந்து அதை மற்­ற­வர்­க­ளி­டத்­தில் திணித்­தால் அது எல்லை மீறி­ய­தாக ஆகி­வி­டும் என்று சட்ட உள்­துறை அமைச்­சர கா சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

CNA938 வானொலி நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்ற அமைச்­ச­ரின் பேச்சு, அண்­மை­யில் சில இன­வாதச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்ள சூழ­லில் இடம்பெற்றது.

இந்­தச் சம்­ப­வங்­களில் ஆகக்­கடை­சி­யாக இம்­மா­தம் 5ஆம் தேதி, நிகழ்ந்த ஒரு சம்­பவத்­தில், கலப்பு இனத் தம்­ப­தி­யி­டம் பேசிய டான் பூன் லீ என்­ப­வர், இந்­திய ஆட­வர்­கள் சீனப் பெண்­க­ளுக்கு வலை விரிக்­கக்­கூ­டாது என்றார்.

நிறு­வ­னம் நடத்­தி­வ­ரும் டேவ் பிர­காஷ், 26, என்­ப­வர் தன் காத­லி­யான ஜாக்­கு­லின் ஹோ, 27 என்­ப­வரு­டன் இருந்­த­போது அவர்­களி­டம் அத்­த­கைய கருத்தை டான் பூன் லீ தெரி­வித்­தார். அச் சம்­ப­வம் படச்சாத­னத்­தில் பதி­வாகி பிறகு ஃபேஸ்புக்­கில் இடம்­பெற்­றது.

இத்­த­கைய இதர சில இன­வா­தச் சம்­ப­வங்­களும் அண்­மை­யில் நிகழ்ந்­தன. என்­றா­லும் பகி­ரங்­க­ மாக இடம்­பெற்ற அந்­தச் சம்­ப­வம் பரந்த அள­வில் குறை­கூ­றல்­க­ளுக்கு இலக்­கா­னது. சிங்­கப்­பூ­ரில் இன நல்­லி­ணக்­கத்­திற்கு மிரட்­டல் ஏற்­பட்­டு­விட்­டதோ என்று கூட மக்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

இது பற்றி கருத்து தெரி­வித்த அமைச்­சர், தான் அப்­படி நினைக்­க­வில்லை என்­றார். "பல­ இன சமூ­க­மாக இருக்­கின்ற ஒரு சமூ­கத்­தில் இன­வா­தம் இல்­லாத ஒரு சமூகத்தை எனக்­குக் காட்­டுங்­கள்," என்று திரு சண்­மு­கம் கேட்­டார்.

இன நல்­லி­ணக்­கத்­தைப் பலப்­படுத்­து­வ­தில் சிங்­கப்­பூர் பெரும்­ மு­ன்னேற்­றத்­தைச் சாதித்து இருக்­கிறது என்ற அமைச்­சர், தனக்­குத் தெரிந்­த­வரை இதர பல இன சமூ­கங்­க­ளை­விட சிங்­கப்­பூர் எவ்­வ­ளவோ சிறப்­பா­னது என்றார்.

சமூ­கத்­தில் இன­வா­தம் இருக்­கும் என்­ப­தை சிங்­கப்­பூர் தலை­வர்­கள் எப்­போ­துமே அங்­கீ­கரித்து வந்­துள்­ள­னர் என்ற அமைச்­சர், எல்லா இன மக்­க­ளுக்­கும் நியா­ய­மான வாய்ப்­பு­கள் இருக்­கும் வகை­யில் அதைச் சரிப்­ப­டு­த்து­வதே முக்­கி­யம் என்­றார்.

"நான் இந்­தி­யர், நான் சீனர், நான் மலாய்க்­கா­ரர் என்று சொல்­லிக் கொள்­வ­தில் தாழ்வு இல்லை. அது நமது கலா­சார பலத்­தைக் காட்­டு­கிறது. நாம் நாமே­தான், அதை அங்கீக­ரிக்க வேண்­டும். இது மிக­வும் முக்­கி­யம். இது நமக்­குப் பலத்­தைத் தரு­கிறது.

"இதற்கு அப்­பால் பார்க்­கும்போது நாம் சிங்­கப்­பூ­ரர்­க­ள். இது பொது­வான அடையாளம். தனிப்­பட்ட அடை­யா­ளத்தை அங்­கீ­க­ரித்து, ஏற்­றுக்­கொண்டு, வலி­யு­றுத்­தி­னா­லும் பொது அடை­யாளத்தை வலி­யு­றுத்த வேண்­டும் என்றார் அவர்.