கொவிட்-19 நெருக்கடிநிலையால் சந்தைகளில் கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வருமானம் குறைந்துள்ள இந்தக் கடைக்காரர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தேசிய சுற்றுப்புற வாரியம் அல்லது வாரியத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சந்தைகளில் உள்ள ஏறத்தாழ 7,000 கடைகளின் ஒரு மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று அறிவித்தார்.
தற்போது நடப்பில் உள்ள
கட்டுப்பாடுகள் காரணமாக சமைத்த உணவுவகைகளை விற்கும் கடைகளைப் போலவே சந்தைக் கடைகளின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கோர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
உணவு அங்காடி நிலையங்களில் உள்ள உணவுக்கடைகளுக்கான வாடகை தள்ளுபடி செய்யப்படுவது குறித்து கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் $9 மில்லியன் நிவாரணத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் இந்த உதவிக்
கரம் நீட்டப்படுகிறது.
வாடகை தள்ளுபடிக்காக
கிட்டத்தட்ட $5.5 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
கடந்த மாதத்துக்கும் இம்
மாதத்துக்கும் கிட்டத்தட்ட 6,000 உணவுக்கடைகள் செலுத்த வேண்டிய வாடகைப் பணத்தில் இது பாதியாகும்.
இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கிய புதிய உணவுக்கடை
களுக்கும் இந்த மாதத்துக்கான வாடகை தள்ளுபடி செய்யப்படும்.கொவிட்-19 பாதிப்பு கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தபோது ஏறத்தாழ 14,000 சந்தைக் கடைகள் மற்றும் உணவுக்கடைகளுக்கு ஐந்து மாத வாடகை தள்ளுபடி வழங்கப்
பட்டது.
கிருமிப் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து கடைக்காரர்களுக்கு ஏற்படும் செலவுகளைக் குறைக்க துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டால் அறிவிக்கப்பட்ட துணை
வரவுசெலவுத்திட்டம் மற்றும் வலிமைக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த
வாடகை தள்ளுபடி அமைந்தது.
கொவிட்-19 மீட்சி மானியத்தின்கீழ் ஒருமுறை வழங்கப்படும் $500 வழங்கீட்டுத் தொகைக்கு விண்ணப்பம் செய்யும்படி கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்
பாடுகள் காரணமாக குறைந்தது 50 விழுக்காடு வருமானத்தை இழந்துள்ள சந்தைக் கடைக்காரர்களையும் உணவுக்கடைக்காரர்களையும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சருமான டாக்டர் கோ
ஊக்குவித்துள்ளார்.
"இந்த சவால்மிக்க கால கட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். தயவுசெய்து உணவு அங்காடி நிலையங்களிலும் சந்தைக் கடைகளிலும் உணவு வாங்கி கடைக்காரர்களுக்கு ஆதரவு அளியுங்கள்," என்றார் டாக்டர் கோ.

