பேச்சுவார்த்தை, பரிசீலனை காரணமாக படிப்படியாக உயரும் சம்பள முறை காலம் பிடிக்கும்

பேச்சுவார்த்தை, பரிசீலனை காரணமாக படிப்படியாக உயரும் சம்பள முறை காலம் பிடிக்கும்

1 mins read
098b4e59-4dc8-415e-9cdc-7aa63764d56e
-

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு முன்பு ஊழி­யர்­கள், முத­லா­ளி­கள் போன்ற சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரி­டையே பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும்.

சம்­ப­ளத்தை உயர்த்­து­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும். இத­னால் படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறையை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை­யின்­கீழ் குறைந்­த­பட்ச சம்­ப­ளம் நிர்­ண­யிக்­கப்­படும். திறன் அடிப்­ப­டை­யில் வெவ்­வேறு நிலை­களில் இருக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்­சித் திட்­டங்­க­ளை­யும் அது நிர்­ண­யிக்­கும்.

முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வக் கலந்­து­ரை­யா­டல் கார­ண­மாக இந்த சம்­பள முறையை நடை­மு­றைப்­

ப­டுத்­து­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் எழுந்­துள்ள அதி­ருப்­திக் குரல்­க­ளுக்கு விளக்­கம் அளிக்­கும் வகை­யில் டாக்­டர் டானின் பதில் அமைந்­தது.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறையின்கீழ் வரக்கூடிய துறையை அடை­யா­ளம் காண­வும் பேச்­சு­வார்த்­தை­கள் முடி­ய­வும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் வழக்­க­மாக இரண்­டி­லி­ருந்­து மூன்று ஆண்­டு­கள் எடுக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

உதா­ர­ணத்­துக்கு, படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை­யில் துப்­பு­ர­வுப் பணித் துறை சேர்த்­துக்­கொள்­ளப்­படும் என்று 2012ஆம் ஆண்­டில் அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால் 2014ஆம் ஆண்­டில்­தான் அத்­து­றை­யில் அந்த முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

துப்­புர­வுப் பணி­யா­ளர்­க­ளின் சம்­ப­ளம் 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து உயர்த்­தப்­பட்­டது.

அதே போல நில­வ­னப்­புத் துறை­யும் இந்த சம்­பள முறை­யின்­கீழ் செயல்­படும் என்று 2013ஆம் ஆண்­டில் அறி­விக்­கப்­பட்­டது. 2016ஆம் ஆண்­டில் அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. கடந்த ஆண்­டி­லி­ருந்து அந்­தத் துறை­யைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் உயர்த்­தப்­பட்­டது.