லாரி ஓட்டுநரின் முகத்தில் குத்திய ஆடவருக்கு அபராதம்

லாரி ஓட்டுநரின் முகத்தில் குத்திய ஆடவருக்கு அபராதம்

2 mins read
cff71c3f-80ae-42dc-aa7a-d11ed7586ba8
ஜெஃப்ரி டோட் மார்ட்டினை (வலது) நோக்கி லாரி ஓட்டுநர் சாங் பிங் விரைந்ததையும் மார்ட்டின் குத்தியதில் நிலைகுலைந்து சாங் விழுந்ததையும் காணொளி காட்டியது.படம்: சாவ்பாவ் -

லாரி ஓட்­டு­ந­ரின் முகத்­தில் குத்­திய ஆட­வ­ருக்கு $5,600 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­தது, மற்­ற­வர்­க­ளின் பாது­காப்­பைக் கரு­தா­மல் மிதி­வண்டி ஓட்­டி­யது ஆகிய குற்­றச்­சாட்­டு­களை கனடா நாட்­டைச் சேர்ந்த 57 வயது ஜெஃப்ரி டோட் மார்ட்­டின் ஒப்­புக்­கொண்­டார்.

2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி காலை 10.20 மணி அள­வில் ஜாலான் யூனோ­ஸில் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான மார்ட்­டின் மிதி­வண்டி ஓட்­டிக்­கொண்­டி­ருந்­த­போது லாரி ஒன்று அவ­ரைக் கடந்­து சென்­றது.

பிறகு அந்த லாரியை மார்ட்­டின் கடந்து சென்­ற­போது லாரி ஓட்­டு­

ந­ரைப் பார்த்து தமது அதி­ருப்­தி­யைக் காட்­டும் வகை­யில் மார்ட்­டின் செய்கை காட்­டி­னார்.

தமது மிதி­வண்­டியை லாரிக்கு முன்­னால் சாலைத் தடத்­தின் நடுவே அவர் நிறுத்­தி­னார்.

இத­னால் லாரி ஓட்­டு­நர் லாரியை நிறுத்­தி­னார். தமது மிதி­வண்­டி­யை­விட்டு கீழே இறங்­கிய மார்ட்­டின் லாரி ஓட்­டு­நரை வசை பாடி­னார். லாரி­யின் சன்­னலை அவர் அடித்­தார்.

இதை­ய­டுத்து, சீன நாட்­ட­வ­ரான 33 வயது சாங் பிங், மார்ட்­டினை நோக்கி லாரி­யைத் திருப்­பி­ அவரை மோத வருவது போல லாரியைச் செலுத்தினார். பிறகு குடுவை ஒன்றை ஏந்­திக்­கொண்டு லாரி­யை­விட்டு இறங்­கிய சாங், மார்ட்­டினை நோக்கி விரைந்­தார்.

அப்­போது மார்ட்­டின் சாங்­கின் முகத்­தில் குத்­தி­னார். இதன் கார­ண­மாக சாங் தடு­மாறி தரை­யில் விழுந்­தார்.

இத­னைத் தொடர்ந்து, மார்ட்­டின் அங்­கி­ருந்து கிளம்­பிச் சென்­றார். இந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது. சாங்­கிற்கு உதட்­டில் காயங்­கள் ஏற்­பட்­டன. அவ­ருக்கு இரண்டு நாட்­கள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­டது.

சம்­ப­வம் நிகழ்ந்து 48 மணி நேரத்­துக்­குள் சாங் கைது செய்­யப்­பட்­டார். மார்ட்­டின் குத்­தி­ய­தற்கு முன்பு சாங் லாரி­யி­லி­ருந்து கீழே இறங்கி அவரை நோக்கி விரைந்­ததை மாவட்ட நீதி­பதி பிரெண்டா டான் சுட்­டி­னார்.

சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டா­த­போ­தி­லும் பெரிய தொகை­யுள்ள அப­ரா­தம் அவ­சி­யம் என்று அவர் குறிப்­பிட்­டார்.